---Advertisement---

தங்க வேட்டையாடப்போகிறாரா தலைவர்?…கமல் ஆரம்பித்ததை முடிக்கப்போகிறாரா ரஜினி?……

Published on: April 30, 2024
coolie
---Advertisement---

“வேட்டையன்” வேலைகள் ஒரு புறம் வேகமாக நடந்து கொண்டிருக்க, திடீரென “கூலி “யாக மாறியுள்ளார். “தீ”, “உழைப்பாளி” படங்களுக்கு பிறகு தற்போது பெயரில் “கூலி”யாகியுள்ளார்  ரஜினி. லோகேஷ் கனகராஜ், சன் பிக்சர்ஸ், ரஜினி கூட்டணியின் அடுத்த படம் தான் “கூலி”. சமீபத்தில் தான் பெயர் அறிவிப்பு வந்தது. மறுநிமிடமே பற்றிக்கொண்டது எதிர்பார்ப்பு.

போதை கலாச்சாரம் குறித்து தனது முந்தைய படங்களில் சொல்லியிருந்த லோகி, ரஜினியை எப்படி கையாளப்போகிறார் என காத்து நிற்கிறது ரசிகர் கூட்டம். “லியோ”விஜய், “விக்ரம்” கமல் இவர்களை பற்றி சமீபத்தில் தான் மிக பிரம்மாண்டமாக பேச வைத்திருந்தார் லோகேஷ்.

“கூலி” படத்தின் டைட்டில் டீசரை பார்த்தவர்களின் எண்ணம் ரஜினிக்கு வயது என ஒன்று உண்டா?, கிடையாதா? என்பது மட்டும் தான். “நினைத்தாலே இனிக்கும்” படத்தின் பாடலை இங்கே ‘பஞ்ச்’ டயலாக பேசியிருந்தார் ரஜினி. இளமை, சுறுசுறுப்பும, வேகம் அன்று எப்படி இருந்ததோ அதே  போல தான் இன்றும் இருக்கிறது அவரின் ஸ்டைலோடு.

coolie
coolie

டீசரில் ரஜினி சன்டையிடும் இடத்தை சுற்றி தங்க நகைகள் குவியலாக காட்டப்பட்டிருந்தது. இதனால் படம் தங்கத்தை மையமாக வைத்து தான் இருக்குமா?. புதையலை தேடப்போகின்றாரா ரஜினி? அல்லது தங்கக்கடத்தல் மையப்படப்போகிறதா? என யோசனை செல்லத்துவங்கியுள்ளது ரசிகர்களுக்கு.

“லியோ”‘படத்தில் ‘ப்ளடீ ஸ்வீட்’ என்ற வார்த்தையும்,  “விக்ரம்” படத்தில் கமல் ‘ஆரம்பிக்கலாமா?’ என கேட்டிருப்பதையும் டீசரில் காட்டியிருந்தார். அதே போல “கூலி”யில் ‘முடிச்சிடலாமா’ என ரஜினி கேட்டிருக்கிறார்.

இது நிச்சயமாக ஆக்சன் படம் தான் என்றும், இதுவரை ரஜினி செய்த ஆக்சனில் இருந்து மாறுபட்டிருக்கும் என லோகேஷ் கனகராஜ் சமீபத்தில் சொல்லியிருந்தார். அவர் சொன்னபடியே படம் அமைந்தால் ரஜினி ரசிகர்களுக்கு அது விருந்தாதாகத்தான் அமையும்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi with a lineup of over six upcoming films.

அடுத்தடுத்து களமிறங்கும் விஜய் சேதுபதி: ஒரே நேரத்தில் 6-க்கும் மேற்பட்ட படங்களில் பிசி!

Kavin and Nayanthara in the new release date promo for the movie Hi.

“நம்மா எதுக்கு பேசணும், படம் பேசட்டும் ஜி”: கவின் – நயன்தாராவின் க்யூட் ‘ஹாய்’ பட புதிய ரிலீஸ் தேதி ப்ரோமோ!

Producer Archana Kalpathi explaining the status of Thani Oruvan 2.

‘தனி ஒருவன் 2’ படம் தாமதமாவது ஏன்? தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி வெளியிட்ட அதிரடித் தகவல்!

Reports suggest Trisha and Hiphop Aadhi joining Karthi and Mohan Raja's upcoming film.

கார்த்தி – மோகன் ராஜா கூட்டணியில் இணையும் த்ரிஷா மற்றும் ஹிப்ஹாப் ஆதி: வெளியானது செம மாஸ் தகவல்!

Janhvi Kapoor and Sreeleela teaming up for a new film directed by Umesh Bist.

முதல் முறையாக இணையும் ஜான்வி கபூர் மற்றும் ஸ்ரீலீலா: உமேஷ் பிஸ்ட் இயக்கத்தில் புதிய படம்!

Directors Andrew Louis and Thiagarajan Kumararaja discussing Pocket Novel.

தியாகராஜன் குமாரராஜா கைகளுக்குச் சென்ற ‘பாக்கெட் நாவல்’ கதை: இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் ஓபன் டாக்!