---Advertisement---

விஜய் என் அளவுக்கு கிடையாது!…ஒதுக்கிய ஐஸ்வர்யா ராய்!…பெஸ்ட் ஆக தெரிந்த பிரசாந்த்…

Published on: April 27, 2024
vijay aiswarya
---Advertisement---

” வைகாசி பொறந்தாச்சு”ல் துவங்கிய பிரசாந்தின் சினிமா வாழ்க்கை மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரான போக்கில் சென்று கொண்டிருந்தது ஒரு காலத்தில். ரஜினி, கமலுக்கு பிறகு அவர்களுடைய இடத்தை நிரப்பப்போவது இவர் தான் என ஏறத்தாழ மக்கள் முடிவு செய்து வைத்தது போலத்தான் இருந்தது.

இவர் நடித்த படங்கள் எல்லாம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வெற்றி வாகை சூடியது. ஆண் ரசிகர்களை விட பெண் ரசிகைகளே  இவருக்கு அதிகமாக இருந்தனர். திடீரென சினிமாவை விட்டு காணாமலே போய்விட்டார் பிரசாந்த். தற்பொழுது விஜயின் “கோஸ்ட்” படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

jeans movie
jeans movie

“ஜீன்ஸ்” படத்தின் நாயகியாக ஐஸ்வர்யா ராயை தேர்ந்தெடுத்தார் ஷங்கர். அவருக்கு ஜோடியாக யாரை நடிக்க வைக்கலாம் என ஒரு குழப்பம் நீடித்து வந்தாம். “உலக அழகி” பட்டம் பெற்று புகழின்  உச்சியில் ஐஸ்வர்யா ராய் இருந்து வந்த நேரம் அது.

தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் இளவட்டங்களான அஜீத், விஜய் பெயர்கள் பரீசீலிகப்பட்டு, அவர்களை பற்றி ஐஸ்வர்யா ராயிடம் தெரிவிக்கப்பட்டது. தன்னை விட இளையவர் போல தோற்றமளிக்கிறார் என சொல்லி விஜயை நிராகரித்து விட்டாராம் ஐஸ்வர்யா ராய்.

பிரசாந்த் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிறது. ‘நடனம்’, ‘கராத்தே’, ‘கும்ஃபூ’ கற்று வைத்திருந்த பிரசாந்த் தான் தனக்கு சரியான ஜோடியாக இருப்பார் என ஐஸ்வர்யா ராய் கருத்து சொல்ல, அவரே கதாநாயாகன் ஆனார்.

ஆனால் விஜய்க்கோ, ஐஸ்வர்யா ராய் உடன் ஒரு படத்திலாவது  நடித்து விட வேண்டும் என்ற ஒரு தீவிர ஆசை இருந்து வந்ததாம். அது இன்று வரை நிறைவேறாமலே உள்ளது. அஜீத், விஜய், தனுஷ் இவர்களை விட தகுதி அதிகம் கொண்டவர் பிரசாந்த் தானாம்.  இந்த தகவல்களை எல்லாம் பிரபல விமர்சகர் சபீதா ஜோசப் சொல்லியிருந்தார்,

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Buzz handles suggest actor and director Pradeep Ranganathan might block his next movie PR06 with AGS Entertainment.

மீண்டும் ஒன்னா சேரும் லவ் டுடே கூட்டணி… பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தைப் பற்றி கிளம்பிய மரண மாஸ் வதந்தி!

Mega Power Star Ram Charan starrer sports drama movie Peddi registers a massive opening crossing 100 crore gross worldwide on Day 1.

முதல் நாளே 100 கோடியைத் தாண்டி மரண மாஸ் காட்டிய பெத்தி… தியேட்டர்களில் ராம் சரணின் பாக்ஸ் ஆபீஸ் ருத்ரதாண்டவம்!

Director Chidambaram next Malayalam film Balan The Boy official trailer releasing today evening ahead of June 19 theatrical release.

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்த மரண மாஸ் படம்… பாலன் படத்தின் திக் திக் ட்ரெய்லர் இன்னைக்கு சாயங்காலம் ரிலீஸ்!

AGS Entertainment producer Archana Kalpathi clarifying rumors about actor Simbu and director Aswath Marimuthu movie status in a recent interview.

சிம்பு மற்றும் அஸ்வத் மாரிமுத்து படம் டிராப் ஆகிடுச்சா… கிளம்பிய வதந்திகளுக்கு நேர்காணலில் அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி!

Tamil actor and director Sasikumar launching the official teaser of Guru Somasundaram starrer Paris Cafe movie tomorrow at 11 AM.

நாளைக்கு காலைல 11 மணிக்கு ஒரு சூப்பர் அப்டேட் வருது… மனசைத் தொடப்போகும் புதிய படத்தின் டீசரை வெளியிடும் சசிகுமார்!

Director Lokesh Kanagaraj motivational quote advising young filmmakers that he made his first short film with just 4000 rupees.

“என் முதல் படத்தை வெறும் 4,000 ரூபாயில்தான் எடுத்தேன்..” புதிய இயக்குநர்களுக்கு லோகேஷ் கனகராஜ் கொடுத்த சீக்ரெட் சக்சஸ் டிப்ஸ்!