---Advertisement---

குருநாதர் அமீரிடமே உண்மையை மறைத்த சசிகுமார்!…எதுக்கு தான் இப்படி செஞ்சாரோ?…

Published on: April 24, 2024
sasi ameer
---Advertisement---

இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் அமீர். “நந்தா” படத்தில் பணியாற்றி இருந்த போதும் இவரது பெயர் சில காரணங்களால் வெளியிடப்படவே இல்லையாம்.

இயக்குனர் ஆன அமீர் “பருத்திவீரன்” என ஒரு மிகப்பெரிய பிளாக்பஸ்டரை கொடுத்துள்ளார் தமிழ் சினிமாவுக்கு. கார்த்தி, பிரியாமணியின் வாழ்க்கை முழுவதும் சொல்லிக் கொண்டே இருக்கலாம் என்கின்ற அளவுக்கு வெற்றியை கண்டது. பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது இந்த படத்தின் மூலமே.

வெளிநாட்டில் படித்திக்கொண்டிருந்த கார்த்தியின் தோற்றத்தை முழுவதுமாக மாற்றி அவரை கிராமத்து ஆசாமியாகவே ஆளை அடியோடு மாற்றி நடிக்க  வைத்திருந்தார் அமீர்.

“ராம்”, “மௌனம் பேசியதே” படங்களில் அமீரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சசிகுமார். “பருத்தி வீரன்” படத்தில் பணிபுரிய சசிகுமாரை அழைத்த போது தான் ஒரு கதையை தயாரித்திருப்பதாகவும், அதை இயக்கவுள்ளாதாகவும் அமிரிடம் சொல்லியிருக்கிறார்.

ஆரம்பத்தில் அமீர் தயாரிப்பதாகத்தான் இருந்ததாம். அதோடு பாக்யராஜின் மகன் சாந்தனு தான் நடிப்பதாகவும் இருந்ததாம்.

subramaniyapuram
subramaniyapuram

ஆனால் சில காரணங்களால் அவர் நடிக்க முடியாமல் போனது.அந்த இடத்தை ஜெய் நிரப்பினாராம். இப்படி மாற்றங்களை கண்டு வெளிவந்த படம் தான் “சுப்ரமணியபுரம்”.

ஆனால் சசிகுமார் படத்தில் நடித்தது கடைசி வரை தனக்கு தெரியாது என சொல்லி இருந்தார் அமீர். தனியாக படம் எடுக்க போகிறேன் என தன்னிடம் சொன்ன சசிகுமார் அவர் நடித்ததை ஏன் மறைத்தார் என்பது தெரியவில்லை தெரியவில்லையாம் அமீருக்கே.

இந்த படத்திற்கு பெரிய இயக்குனர் சசிகுமாரை விட நடிகர் சசிகுமாராகவே பார்க்கப்பட்டார். “நாடோடிகள்”, சுந்தர பாண்டியன்”, “அயோத்யா” என  கதாநாயகனாக வெற்றி நடை போட்டு வருகிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Nayanthara and Trisha in consideration as heroine for Karthi and Mohan Raja's movie.

கார்த்தி ஜோடியாக நயன்தாரா அல்லது த்ரிஷா? மோகன் ராஜா படத்தின் ஹீரோயின் ரேஸில் யார் முன்னணி?

Director Sreenu Vaitla talking about missing the chance to direct Ajith Kumar.

நடிகர் அஜித்துடனான அந்த பொன்னான வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன்: பிரபல தெலுங்கு இயக்குநர் வருத்தம்!

Actress Mrunal Thakur and cricketer Yashasvi Jaiswal sparking viral dating rumours.

பிரபல நடிகை மிருணாள் தாக்கூர் மற்றும் கிரிக்கெட் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் டேட்டிங் ரகசியம்? இணையத்தில் தீயாய் பரவும் வைரல் வீடியோ!

Movies and web series releasing on OTT platforms this week.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களின் முழு லிஸ்ட்!

Singer Kenesha Francis makes a social media comeback.

சர்ச்சைகளுக்குப் பிறகு சமூக வலைதளங்களில் கம்பேக் கொடுத்தார் கெனிஷா: ‘ஓடி ஓடி’ பாடலைத் தயார் செய்த அறிவிப்பு!

Vijay Sethupathi reveals the first look poster of Makkal Kaavalan.

மணிகண்டனின் ‘மக்கள் காவலன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!