---Advertisement---

அவங்க வேற, நாங்க வேற இல்ல!…சிவாஜிக்கு அவ்வளவு நெருக்கமானவரா ஜெய்சங்கர்?…

Published on: April 21, 2024
jaysankar sivaji
---Advertisement---

“தென்னக ஜேம்ஸ்பாண்ட்” என்ற அடைமொழியோடு தமிழ் படங்களில் நடித்து வந்தவர். “எம்.ஜி.ஆர் – சிவாஜி” காலத்திலேயே அவர்களுக்கு அடுத்த இரண்டாம் கட்ட கதாநாயகர்கள் பட்டியலில் இடம் பிடித்தவர் ஜெய்சங்கர்.

துப்பறியும் கதைகளில் நடித்த இவரது படங்களில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. அந்த கதாப்பாதத்திரத்திற்கு தேவையான சுறுசுறுப்பும், துள்ளலும் இவரிடம் அதிகமகவே இருந்து வந்தது.

நாளடைவில் குணச்சித்திர நடிகராக மாறிய ஜெய்சங்கர் ரஜினிகாந்த் – கமல்ஹாசனுடனும்  நடித்திருக்கிறார்.

ரஜினிகாந்துடன் இவர் நடித்த “தளபதி” படத்தில் அதிகமான வசனங்கள்  ஜெய்சங்கருக்கு கிடையாது. தனது அமைதியான நடிப்பால் இவர் வந்த காட்சிகளிலெல்லாம் ஸ்கோர் செய்திருப்பார்.

“சிங்காரவேலன்” படத்தில் சீரியஸான வேடத்தில் இவர் நடித்திருந்தாலும், இவர் வரும் காட்சிகளில் நகைச்சுவையும் கலந்திருந்தது.

எம்.ஜி.ஆருடன் நெருங்கிய நட்பில் இருந்து வந்தவர்.  படங்கள் மற்றும் அவரது அரசியல் விஷயங்களில் கூட தனது மனதில் பட்ட கருத்துக்களை வெளிப்படையாக எம்.ஜி.ஆரிடம்  சொல்லத்தயங்க மாட்டாராம்.

அந்த அளவிற்கு உரிமை கொடுத்திருந்தாராம் எம்.ஜி.ஆர் இவருக்கு. அதே போல சிவாஜியுடனும் நெருக்கம் வைத்திருந்தாராம் ஜெய்சங்கர்.

jaisankar sivaji
jaisankar sivaji

“வாழ்க்கை”, “பந்தம்” சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “படிக்காதவன்” உள்ளிட்ட பல படங்களில் ஜெய்சங்கருடன் சிவாஜி கணேசன்…

ஜெய்சங்கரின் மகன் சஞ்சய் சிவாஜி கணேசனுக்கு, தனது அப்பா ஜெய்சங்கரை மிகவும்  பிடிக்கும் என சொல்லியிருந்தார். சினிமாவோடு  அவர்கள் இருவருடைய தொடர்பு நின்று போய்விடாமல் குடும்ப நண்பர்களாக மாறினார்களாம்.

தங்கள் குடும்பம் இன்றும் சிவாஜியின் வாரிகளான ராஜ்குமார், பிரபு ஆகியோரோடு நல்ல நட்பை  தொடர்ந்து வருவதாக சொல்லியிருந்தார்

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.