---Advertisement---

சரத்குமாரை பாராட்டி தள்ளிய தயாரிப்பாளர் ராஜன்!…அடடே அவரா?…இது புதுசா இருக்கே!…

Published on: April 19, 2024
rajan sarathkumar
---Advertisement---

மேடைகள், பொது நிகழ்ச்சிகள் என்று  பாராமல், தன் மனதில் பட்ட கருத்துக்களையும், தான் சந்தித்த நிகழ்வுகளையும், அனுபத்தையும் வெளிப்படையாக பேசும் குணம் கொண்டவர்.  தயாரிப்பாளர் ராஜன்.  நேர்மையானவர் என்பதால் இவரிடம் இருந்து பாரட்டு பெறுவது கடினம் என்று கூட சொல்லப்படும்.  இப்படிப்பட்டவர் தனது தயாரிப்பாளர் வாழ்வில் நடந்த ஒரு சுவாரசியத்தை சொல்லியிருப்பார்.

வில்லனாக வாழ்க்கையை துவங்கி, புகழ் கொண்ட கதாநாயகர்களில் ஒருவராக வீர நடை போட்டு, தற்பொழுது குணச்சித்திர வேடங்களை ஏற்று நடித்து வருபவர்  சரத்குமார். இவர் நடித்த படங்கள் ஏராளமானவை “வெள்ளிவிழா” கண்டது உண்டு. “சூரியவம்சம்”, “நாட்டாமை” “நட்புக்காக”,”சேரன் பாண்டியன்” என அடுக்கிக் கொண்டே போகலாம்.

sarathkumar
sarathkumar

மறைந்த ‘கேப்டன்’, ‘புரட்சி கலைஞர்’ விஜயகாந்துடன் “கேப்டன் பிரபாகரன்” படத்தில்  நடித்திருந்தார். இவரது நல்ல மனம் குறித்து தயாரிப்பாளர் ராஜன் கூறியிருந்தார்.
சரத்குமாரை வைத்து “தங்கமான தங்கச்சி” என ஒரு படத்தை  எடுத்திருக்கிறார்.

ராஜன் அந்த படத்தின் சம்பளமாக சரத்குமாருக்கு பேசிய  தொகை  ஒன்றரை லட்ச ரூபாய். குறித்த நாட்கள் தாண்டியும் படப்பிடிப்பு சென்றதாம். தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ‘கமிட்’ ஆகியிருந்ததால் ராஜனின் படம்  தாமதம் ஆனதாம்.

இது குறித்து ராஜன் சரத்குமாரிடம் கேட்ட போது என் சூழ்நிலை தான் உங்களுக்கு தெரியாதா? என சொன்னாராம். அவருக்கு பேசப்பட்ட சம்பள தொகையில் பத்தாயிரம் ரூபாயை ராஜன் பாக்கியாக கொடுக்க வேண்டியதாக இருந்தாம்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  தலைவரு அலப்பற...களத்துல சூப்பர் ஸ்டாருதான்!...வசூல் வேட்டையில் இறங்கிய வேட்டையன்?...

ஆனால் சரத்குமாரோ படப்பிடிப்பு தள்ளிப்போக தான் காரணமானதால்  அந்த பத்தாயிரம் ரூபாய்  வேண்டாம் எனக் கூறிவிட்டாராம். தன்னால் யாரும் சிரமப்படக்கூடாது என்ற எண்ணம் கொண்டவர் சரத்குமார்  என ராஜன் மனம் திறந்திருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Cinematic editorial concept visual representing director Mathimaran's Tollywood villain casting choice for Suriya 49.

‘மண்டாடி’ சென்டிமென்ட்டைக் தொடரும் இயக்குநர் மதிமாறன்! ‘சூர்யா 49’ படத்திலும் டோலிவுட் வில்லன் ஃபார்முலாவா?

Romantic comedy editorial concept visual celebrating the reunion of Mamitha Baiju and Sangeeth Prathap in Hello Dear

மீண்டும் இணையும் ‘பிரேமலு’ க்யூட் ஜோடி! மமிதா பைஜு, சங்கீத் பிரதாப் நடிக்கும் ‘ஹலோ டியர்’ புதிய போஸ்டர் மற்றும் ரிலீஸ் தேதி வெளியீடு!

Cinematic editorial concept visual representing the emotional drama Vanni starring Ineya, centered on women's rights and land rights.

கும்பகோணம் முதல் இலங்கை வரை பரபரப்பாக நடக்கும் படப்பிடிப்பு… இனியா முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘வன்னி’ படத்தின் முழு விவரம்!

High-stakes Kollywood cinema production office editorial concept representing the industry buzz around Sivakarthikeyan's remuneration condition and producer discussions.

கதை கேட்பதற்கு முன்பே ₹20 கோடி அட்வான்ஸா? சிவகார்த்திகேயன் விதித்த நிபந்தனையால் பின்வாங்கிய முன்னணி தயாரிப்பாளர்!

Editorial music studio concept graphic commemorating 15 years of Why This Kolaveri Di and the online discussion surrounding Anirudh and Dhanush.

622 மில்லியன் பார்வைகளைக் கடந்து வரலாறு படைத்த பாடல்… தனுஷ் ரசிகர்களைக் கொந்தளிக்க வைத்த அனிருத்தின் லேட்டஸ்ட் பதிவு!

High-voltage cinematic editorial concept visual celebrating Superstar Rajinikanth's birthday special theatrical release of Jailer 2 Director's Uncut Version.

புதிய சென்சாருடன் மீண்டும் திரையரங்குகளை அதிர வைக்க வரும் ‘ஜெயிலர் 2’… ரஜினி பிறந்தநாளில் காத்திருக்கும் சர்ப்ரைஸ் என்ன தெரியுமா?