---Advertisement---

என்னது இவங்கல்லாம் நடிகர்களா?…சத்தியமா நம்பவே முடியலையே!…

Published on: April 15, 2024
atlee ranjith
---Advertisement---

வில்லன்கள் கதாநாயகர்கள் ஆனதும், கதாநாயகர்கள்  நகைச்சுவை நடிகர்கள் ஆனதும், இப்படி சூழ்நிலையால் தங்களின் நிலைப்பாட்டினை காப்பாற்ற முடியாமலும் ரசிகர்களின் எண்ண ஓட்டத்தை திருப்தி படுத்துவற்காகவும் மாற்றங்களை செய்தவர்களும்   உண்டு.

இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் தனது படங்களில் ஒரு காட்சியிலாவது தலையை காட்டும் பழக்கத்தை  வைத்தருந்தார்.

ravikumar
ravikumar

ஆனால் சினிமாவில் தங்களுக்கான ஓர் உரிய அங்கீகாரம் கிடைக்கும் முன்னரே ஓரிரு காட்சிகளில் தலையை காட்டி பெரும்பாலானவர்களால்  கவனிக்கப்படாமல்,  பின்னாட்களில் வி.வி.ஐ.பிகளாக மாறியவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

“நண்பன்”படம் விஜய்க்கு முக்கியமான படமாக அமைந்தது. ஷங்கர் இயக்கத்தில் இலியானா விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்திருப்பார். இந்த படத்தில் விஜய் – இலியானா நடனமாடிய ‘அஸ்கலஸ்கா’ பாடலில் ஒரு காட்சியில் தற்பொழுது ஒட்டு மொத்த இந்தியாவையே கலக்கிவரும் இயக்குனரான அட்லீ  நடித்திருப்பார்.  நம்மில் பெரும்பாலோனனோர் இதனை கவனித்திருக்க தவறியிருக்கலாம்.

“சென்னை –  600 028” முதல் பாகம் இன்றும் பலரால்  மறக்காத முடியாத ஒரு படம்,  நண்பர்களுடன் வாலிப பருவத்தில்  கடந்து வந்த பாதையை நினைவு கூறும் விதமான பல காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கும்.

கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து வெளிவந்த இந்தப்படத்தில் கதாநாயகர்களில் ஒருவரான ஜெய் பந்து வீசுவது போன்ற காட்சி  ஒன்றில் இயக்குனர் பா.ரஞ்சித் நடித்திருப்பார். பீல்டிங் செய்யும் வீரர்களில் ஒருவராக  சில நொடிகள் மட்டுமே வந்திருப்பார்.

இவர்களைப்போலவே  இயக்குனர் வெற்றிமாறனும் ஒரு காட்சியில் நடித்திருக்கிறார். 2002 ம் ஆண்டு இயக்குனர் கதிர் இயக்கத்தில்  வெளிவந்த படம் காதல் வைரஸ். ஷாலினி அஜீத்குமாரின் சகோதரர் ரிச்சர்ட் கதாநாயகனாக அறிமுகமான படம்.  ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்க ஸ்ரீதேவி இந்த படத்தில் நாயாகியாக நடித்திருந்தார்.

ஸ்ரீதேவி வீட்டை விட்டு வெளியே வருவது போன்ற காட்சி  ஒன்று இடம் பெற்றிருக்கும். அந்த காட்சியில்  காரில் ஒரு நபர் கையில் கத்தியோடு உட்கார்ந்திருப்பார்.  அவர் வேறு யாருமல்ல இயக்குனர் வெற்றிமாறனே.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Superstar Rajinikanth in the new poster of Jailer 2.

அஜித்தை தொடர்ந்து ரஜினியின் மாஸ் அப்டேட்: வெளியானது ‘ஜெயிலர் 2’ படத்தின் புதிய போஸ்டர் மற்றும் முதல் பாடல் வெளியீட்டுத் தேதி!

Actor Dhruv Vikram talking about personal life scrutiny and inner resilience.

“விமரிசனங்கள் என்னை பாதித்துள்ளது”: பொதுவெளி விமரிசனங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து மனம் திறந்த நடிகர் துருவ் விக்ரம்!

Actress Pooja Hegde waving the Indian flag at the India Day Parade in New York.

நியூயார்க்கில் இந்திய சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அசத்திய பிரபல நடிகை!

Ajith Kumar's 'Daredevil' movie shooting updates and casting news.

அஜித்தின் ‘மார்வெல்’ டைட்டில் டேர்டெவில்: செப்டம்பர் இறுதியில் தொடங்கும் ஷூட்டிங் – மோகன்லால் விலகல் மற்றும் லேட்டஸ்ட் சினிமா பஸ்!

Actress Samantha Ruth Prabhu hosting Celebrity MasterChef Tamil.

மாஸ் என்ட்ரி கொடுக்கும் சமந்தா: சோனி விழா மற்றும் சோனி லிவ் தளத்தில் பிரம்மாண்டமாகத் தொடங்குகிறது ‘செலிபிரிட்டி மாஸ்டர் ஷெஃப் தமிழ்’!

Actor Dhruv Vikram sharing his admiration for Thalapathy Vijay.

“அவர் ஒரு உண்மையான விஷனரி”: தளபதி விஜய் குறித்து நடிகர் துருவ் விக்ரம் வெளிப்படுத்திய நெகிழ்ச்சியான பாராட்டுக்கள்!