---Advertisement---

எல்லாம் அவரால்தான்… ஹிட் பட இயக்குனர்களுக்கு அறிமுகம் கொடுத்த விஜயகாந்த்…

Published on: April 15, 2024
vijayakanth
---Advertisement---

“விஜயகாந்த்” தமிழ் திரை உலகம் உள்ள வரை இந்த பெயர் நிலைத்தே நிற்கும்.  இவரால் வாழ்வு பெற்றவர்கள் ஏராளம்.  வலது கை,கொடுப்பது இடது கைக்கு தெரியாக்கூடாது என்பதனை தனது வாழ்வில் சாத்தியமாக்கிகாட்டியவர்..

மனிதாபிமானமும்,  இரக்ககுணமுமே இவரின்  அடையாளம். சற்று கோபக்காராக இருந்தாலும் உதவி செய்வதில் முன்னுதாரணமாக விளங்கியவர்.

“கேப்டன்”, “புரட்சிக்கலைஞர்” என்கின்ற அடைமொழிகளோடு அன்பாக அழைக்கப்பட்டவர்.  இவரால் அடையாளம் காட்டப்பட்டவர்கள் ஏராளாம்.

வெற்றிப்படங்களை அதிகமாக கொடுத்து ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட இயக்குனர்களும் இந்த பட்டியலில் நிச்சயமாக உண்டு.

அரவிந்த்ராஜ் “ஊமைவிழிகள்” படத்தின் மூலம் அறிமுகமானவர். தமிழ் சினிமா வரலாற்றில்  மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்த இந்த படம் வெளிவந்த நேரத்தில் வசூலில்  சக்கைபோடு போட்டது.

தயாரிப்பாளராக மட்டுமே அறியப்பட்ட ‘கலைப்புலி’ தானுவை இயக்குனராக்கிய வரும் விஜயகாந்தே. ஷோபனா ஜோடியாக நடித்த “புதுப்பாடகன்” படத்தில் தான் தானு இயக்குனர் அவதாரம் எடுத்தார்.

rkselvamani balujanand
rkselvamani balujanand

“புலன் விசாரனை”படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஆர்.கே.செல்வமனி,  “நானே ராஜா, நானே மந்திரி” படத்தில் அறிமுகப்படுத்தப்பட்டவர் பாலு ஆனந்த்

விஜயகாந்திற்கு பெயர் பெற்றுத்தந்த படங்களில்  ஒன்றான “தெற்கத்திக்கள்ளன்” இயக்குனர் கலைமணியின் முதல் படமான இதில் ராதிகா ஜோடியாக நடித்திருப்பார்.

செந்தில்நாதன் இயக்கத்தில் வெளியான “பூந்தோட்ட காவல்காரன்”. மிகப்பெரிய  பிளாக் – பஸ்டர் ஹிட் ஆன  இந்த படத்தின் கதையை  விஜயகாந்திடம் சொன்னதுமே அவர் சம்மதித்து  விட்டாராம்.

தனது முதல் படம் மிகப்பெரிய வெற்றிபடமாக அமைய வேண்டும் என்கிற எண்ணம் எல்லா கலைஞனுக்கும் உள்ளது தான். ஆனால்  விஜயகாந்தால் செந்தில்நாதனுக்கு அடித்த அதிர்ஷ்டம் அவரை மிகப்பெரிய உயரத்திற்கே கொண்டு சென்றது.

விஜயகாந்தின் அனேக படங்களுக்கு வசனங்கள் எழுதியவர் லியாகத் அலிகான். விஜயகாந்தின்  சிம்மக்குரலில் இவர் எழுதிக்கொடுத்த வசனங்கள் திரையை தீப்பிடிக்கவைத்தது.

“பாட்டுக்கொரு தலைவன்” படத்தில் லியாகத் அலிகானை இயக்குனராக்கி அழகு பார்த்தார் விஜயகாந்த்.  இப்படி இவரால் வாழ்வு பெற்றவர்களின் பெயர் பட்டியல் கணக்கில் அடங்காததாகத்தான் இருக்கின்றது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Worldwide box office milestone celebration poster for Mandaadi.

ரூ.125 கோடியைக் கடந்து சாதனை படைக்கும் சூரி நடித்த ‘மண்டாடி’: பாக்ஸ் ஆபிஸ் நிலவரம்!

Official shoot commencement visual for Sivakarthikeyan's movie '#SK27'.

சிவகார்த்திகேயன் – ராம்குமார் பாலகிருஷ்ணன் கூட்டணியின் ‘#SK27’ படப்பிடிப்பு இன்று தொடக்கம்: உற்சாகத்தில் ரசிகர்கள்!

Official new poster featuring a stylish Superstar Rajinikanth from Jailer 2.

ஸ்டைலான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் வெளியானது ‘ஜெயிலர் 2’ புதிய போஸ்டர்: ‘ஒன் சன் ஒன் மூன்’ பாடலுக்காக காத்திருக்கும் ரசிகர்கள்!

Official launch event visual for Dhanush's movie '#D56'.

தனுஷின் ‘D56’ படம் மதுரையில் பூஜையுடன் தொடக்கம்: கோடை 2027-ல் ரிலீஸ்!

Actor Legend Saravanan speaking at a private college event in Chennai.

விஜய் சார் படங்கள் போல என் படமும் இருக்கும்: டிரிபிள் ஆக்ஷனில் களமிறங்கும் லெஜெண்ட் சரவணன்!

Promotional visual representing Hip Hop Thamizha's insights on Meesaya Murukku 2.

மீசைய முறுக்கு 2 படத்தில் 3 தலைமுறை கானா இசை: சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்த ஹிப்ஹாப் தமிழா!