---Advertisement---

வடிவேலுவின் படத்தில் பிரபுதேவா நடிக்கிறாரா?

Published on: April 19, 2022
---Advertisement---

வடிவேலு , பிரபுதேவா காம்பினேஷன்கள் எப்போதுமே ஸ்பெஷலான காம்பினேஷனாகவே இருக்கும். இவர்கள் நடிப்பில் வந்த அனைத்து படங்களும் சும்மா அள்ளும்.

அதிலும் மிஸ்டர் ரோமியோ, ராசய்யா, மனதை திருடிவிட்டாய், காதலன், லவ் பேர்ட்ஸ் எல்லாமே சூப்பரான படங்களாக இருக்கும்.

இந்த நிலையில் இரண்டு நாட்கள் முன் பிரபுதேவாவுடன் வடிவேலு வெளியிட்ட சிங் இன் த ரெய்ன் பாடல் வீடியோ வரவேற்பை பெற்றது.

விசயம் என்னவென்றால் பிரபுதேவா வடிவேலு படத்தில் பல வருடங்களுக்கு பின் பணியாற்றுகிறாராம்.

நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் வடிவேலு நடித்து வருகிறார்.

நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு சூப்பரான அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இந்த படத்தில் நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளாராம்.

இது சம்மந்தமாக “நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் பிரபுதேவா ஒரு பாடலுக்கு நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். மீண்ட்ய்ம் வைகைப்புயல் வடிவேலுவின் தாறு மாறு மூவ்ஸ்களை காண தயாராகுங்கள்” எனக் கூறி படப்பிடிப்புத் தளத்தில் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.  வடிவேலு பிரபுதேவா கூட்டணியில் உருவான பேட்டராப் உள்ளிட்ட பல பாடல்கள் எவர்கிரீன் ஹிட்டாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

சர்தார் 2 பட விழாவில் பேசிய நடிகர் கார்த்தி மற்றும் மாலவிகா மோகனன்.

Karthi Faces Severe Backlash: ‘மாலவிகாவை அப்படி எதிர்பார்த்தேன்’ – மோனிகா பெல்லூச்சி ஒப்பீட்டால் இணையத்தில் வெடித்த விவாதம்!

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!