---Advertisement---

கோட்டையை காக்கும் திருமயம் கோட்டை பைரவர்

Published on: February 4, 2022
---Advertisement---

சென்னை காரைக்குடி நெடுஞ்சாலையில் புதுக்கோட்டையை அடுத்த திருமயத்தில் சாலை ஓரத்தில் காட்சி தருபவர் கோட்டை பைரவர்.

பொதுவாக சிவன் கோவில்களில் கோவிலை காப்பவர் பைரவர். இவருக்குத்தான் இரவு கோவில் நடை சாத்தும்போது இறுதியாக பூஜை செய்து கோவில் நடையை அடைத்து விட்டு செல்வர்.

இரவு முழுவதும் பைரவரின் கட்டுப்பாட்டில்தான் கோவில் இருக்கும் எந்த வித தீங்கும் கோவிலுக்கு நேராமல் இரவு முழுவதும் காப்பவர் பைரவர் என்பது ஐதீகம்.

பொதுவாக பைரவர் வழிபாடு என்பது சனியினால் ஏற்படும் சங்கடங்களை வெகுவாக குறைக்கும் ஒரு வழிபாடு.

ஏனென்றால் சனி பகவானின் குரு பைரவர். சனியினால் பீடிக்கப்பட்டோர் குருவான பைரவரிடம் சொன்னால் அவர் சனியிடம் சொல்வார் குரு சொல்வதை சிஷ்யன் தட்ட முடியாதல்லவா அதனால் பைரவரை தேய்பிறை அஷ்டமி அன்று வழிபடுகிறார்கள்.

 

திருமயத்தில் அருள் பாலிக்கும் ஸ்ரீ கோட்டை பைரவர் கால பைரவ அம்சம் ஆவர். சிவபெருமான் பைரவ வடிவம் கொண்டதாக ஆகமங்கள் இயம்புகின்ற இக்கோட்டை பைரவரிடம் வேண்டினால் நினைத்தது நடக்கும்.

ராமநாதபுரச் சீமையை ஆண்டகிழவன் சேதுபதி அவர்களால் இக்கோட்டையானது கட்டப்பட்ட போது கோட்டையின் தென்புற பிரதான வாயிலில் ஸ்ரீசக்தி விநாயகரும் ஸ்ரீ ஆஞ்சநேயர் சன்னதிகளும், கோட்டையின் வடபுற சுவற்றில் ஸ்ரீ கோட்டை பைரவர் கோவில் அமைக்கப்பட்டது.

இவர் இந்த கோட்டையை காக்கும் பைரவராக காட்சியளிக்கிறார். சென்னை காரைக்குடி பிரதான சாலையில் திருமயத்தில் சாலையோரத்தில் இந்த பைரவர் காட்சி தருகிறார் இந்த பகுதியில் செல்லும்போது பைரவரை வணங்க மறவாதீர்கள்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Actor Vijay Sethupathi locked with busy back-to-back movie shooting schedules for Pocket Novel, Kiruthiga Udhaynidhi project, and Vetri Maaran's Arasan.

Back-To-Back Call Sheet Blast: ஜூன் 17 முடிச்சு ஜூன் 18 புது படம்! ஓய்வில்லாமல் ஓடும் விஜய் சேதுபதி… கோலிவுட்டை அதிர வைக்கும் மெகா லிஸ்ட்!

YouTuber-turned-director VJ Siddhu reportedly upset over long night schedules and production disruptions on the sets of his debut Tamil movie Dayangaram.

Unexpected Breakdown: 50 நாள் ஷூட்டிங்… மாலை 6 டூ காலை 6 மணி வரை முரட்டு வேலை… விஜே சித்துவின் “டயாங்கரம்” படப்பிடிப்பில் என்னதான் நடக்கிறது?

Stylized high-contrast cinematic typography billboard display tracking Mega Power Star Ram Charan and actress Janhvi Kapoor's global theatrical performance metrics.

PEDDI Box Office Storm: 5 நாட்களில் 160 கோடி வசூல்… ராம் சரண் – ஜான்வி கபூர் ‘பெத்தி’ படத்தின் அசுர வேட்டை… பிரேக்ஈவன் இலக்கு இவ்வளவுதானா!

Director Jason Sanjay sharing working stills and behind-the-scenes memories with his crew from the sets of his debut movie Sigma Style under Lyca Productions.

கேமரா முன்னாடி இல்ல… கேமராவுக்கு பின்னாடி மாஸ் காட்டும் விஜய் மகன்! “சிக்மா ஸ்டைல்” செட்டில் இருந்து ஜேசன் சஞ்சய் வெளியிட்ட கியூட் போஸ்ட்!

Actor Soori's upcoming movie Mandaadi directed by Mathimaran and presented by Vetri Maaran locked for an exciting announcement tomorrow at 5 PM.

கடல் பின்னணியில் சூரியின் மிரட்டலான ரத்த சரித்திரம்… “மந்தாடி” படத்தின் முரட்டு அப்டேட்… நாளை மாலை 5 மணிக்கு ஆட்டம் ஆரம்பம்!

Actor Vishnu Vishal and actress Aishwarya Lekshmi's upcoming movie Gatta Kusthi 2 first single track Sambavakaari out now officially.

“டைம் டு டான்ஸ்…” விஷ்ணு விஷாலின் ‘கட்டா குஸ்தி 2’ முரட்டு அப்டேட்… தாளம் போட வைக்கும் ‘சம்பவகாரி’ பாடல் இதோ!