ஹெச். வினோத் இயக்கத்தில் அஜீத் நடித்துள்ள படம் வலிமை. ஏற்கனவே தீரன் அதிகாரம் ஒன்று, சதுரங்க வேட்டை உள்ளிட்ட வித்தியாசமான படங்களை இயக்கியதன் மூலம் புகழ்பெற்றவர் வினோத் என்பதால் இப்படம் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
இந்த நிலையில் இன்று இப்படத்தின் டிரெய்லர் வெளியாக உள்ளது.இதனால் வலிமை டிரெய்லர் என்ற ஹேஷ் டேக் டுவிட்டரில் டிரெண்டிங்கில் விட்டு ரசிகர்கள் தெறிக்க விடுகின்றனர்.
இப்படம் சென்சாருக்கு அனுப்பப்பட்டுள்ளது எனவும் பொங்கல் ரிலீசுக்காக தியேட்டர்களில் வர இருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.








