---Advertisement---

புனித் ராஜ்குமார் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

Published on: October 29, 2021
---Advertisement---

கன்னட நடிகரும் கன்னட சூப்பர் ஸ்டார் நடிகருமான புனித் ராஜ்குமார் இன்று திடீரென மாரடைப்பால் மரணமடைந்தார். இன்று ஜிம்மில் ஒர்க் அவுட் செய்து கொண்டிருந்தபோது திடீரென மாரடைப்பு ஏற்பட்டது உடனடியாக பெங்களூருவில் உள்ள விக்ரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள அறிக்கையில்,

விதியின் ஒரு கொடூரமான திருப்பம், புனித் ராஜ்குமார் என்ற ஒரு திறமையான மற்றும் திறமையான நடிகரை நம்மிடமிருந்து பறித்து விட்டது. இது போக வேண்டிய வயது இல்லை. வரும் தலைமுறையினர் அவரது படைப்புகள் மற்றும் அற்புதமான ஆளுமைக்காக அவரை அன்புடன் நினைவுகூருவார்கள். அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி.

என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.