நடிகை சமந்தா தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன் இவர்களுக்குள் பிரிவு ஏற்பட்டதை முறைப்படி அறிவித்தனர். பிரிவுக்கு பிறகு பத்திரிக்கைகள் ஒவ்வொன்றும் தங்கள் இஷ்டத்துக்கு எழுதி வருவதால் மனம் நொந்துள்ள சமந்தா தனது தோழி ஷில்பா என்ற ஒருவருடன் வட இந்திய ஆன்மிக டூர் கிளம்பியுள்ளார்.
பத்ரிநாத், கேதர்நாத், கங்கோத்ரி உள்ளிட்ட இடங்களில் உள்ள கோவில்களுக்கு அவர்கள் சென்றுள்ளனர். இருவரும் ஒன்றாக செல்வதை உறுதி செய்யும் வகையில் ஷில்பா ரெட்டி இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.








