தமிழ் திரையுலகில் வெண்ணிற ஆடை படம் மூலம் இயக்குனர் ஸ்ரீதரால் அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகர் ஸ்ரீகாந்த். சட்டம் என் கையில், நீயா, காசேதான் கடவுளடா , ராஜநாகம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பல்வேறு படங்களில் கதாநாயகனாகவும், சில படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் இவர் நடித்துள்ளார்.
தங்கப்பதக்கம் படம் இவரது திரைப்படத்தில் பெரிதும் பேசப்படும் படமாகும். அதில் சிவாஜிகணேசனின் மகனாக இவர் நடித்திருப்பார்.
ஈரோட்டை பூர்விகமாக கொண்ட இவர் 1940ம் ஆண்டு பிறந்தார்.
வயோதிகம் காரணமாக கடந்த பல வருடங்களாக இவர் நடிக்கவில்லை. குறிப்பாக தனுஷ் நடித்த காதல் கொண்டேன் படத்துக்கு பிறகு பெரிய அளவிலான படங்களில் இவர் நடிக்கவில்லை.
வயோதிகம் காரணமாக இவர் நேற்று மரணமடைந்தார்.







