உலகம் முழுவதும் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், மெசேஞ்சர் வாட்ஸப் செயலிகள் திடீரென பல இடங்களில் செயல்படவில்லை. இதனால் தகவல் தொடர்பு பரிமாற்றத்தில் மிகுந்த சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் இது தற்போது மீண்டும் அனைத்தும் செயல்பட துவங்கியுள்ளது.
இதில் உள்ள சிக்கல்கள் சிறிது சிறிதாக நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து கருத்து கூறியுள்ள ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க் நெருங்கியவர்களிடம் தொடர்பு கொள்ள எங்கள் சேவையை எந்த அளவுக்கு நம்பியுள்ளீர்கள் என தெரியும் இடையூறுக்கு மன்னிக்கவும் என கூறியுள்ளார்.







