இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலி. இவர் சென்னை கிரிக்கெட் மைதானத்தில் நடந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் கலந்து கொண்டபோது நடந்த நிகழ்வு சுவாரஸ்யமானது.
அஜீத் ரசிகர்கள் கடந்த ஒரு வருடமாகவே வலிமை படம் குறித்து எந்த தகவலும் இல்லாததால் பார்ப்பவர்களிடம் எல்லாம் வலிமை அப்டேட் கேட்டுக்கொண்டே இருந்தனர்.
பிரபலங்கள் பலரிடமும் இவர்கள் வலிமை அப்டேட் கேட்டு வந்த நிலையில் கிரிக்கெட் வீரர் மொயின் அலியிடமும் கேட்டனர்.
இதை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வீடியோவாகவே வெளியிட்டு பேசினார்.
தற்போது வலிமை அப்டேட் எல்லாம் போதும் போதும் என்ற அளவு வந்து விட்டது. இந்த நிலையில் மொயின் அலி கூறி இருப்பதாவது. சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டது மறக்க முடியாதது என கூறியுள்ளார்.









