விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். பூஜா ஹெக்டே ஜோடியாக நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் விஜய் தனது அடுத்த படமாக தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி பைத்திப்பள்ளி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
பிரபல தெலுங்கு பட தயாரிப்பாளர் தில் ராஜூ தனது வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் சார்பாக இப்படத்தை தயாரிக்கிறார்.
தற்போதைக்கு விஜய் 66 தான் பெயர் இன்னும் வைக்கப்படவில்லை.







