சில நிறுவனங்கள் விநோதமாக புதிய புதிய அறிவிப்பை எல்லாம் வெளியிடும். சில வருடங்களுக்கு முன் வந்த சில திகில் திரைப்படங்களை உட்கார்ந்து தனியாக பார்ப்பவர்களுக்கு பரிசு என்றெல்லாம் அந்த பட நிறுவனங்கள் அறிவித்தன.
அதைப்போல தற்போதும் புதுமையாக ஒரு நிறுவனம் அறிவித்துள்ளது.
பைனான்ஸ் பஸ் என்ற அமெரிக்க நிறுவனம் 13 திகில் படங்களை ஒன்றாக உட்கார்ந்து பார்த்தால் ரூபாய் 95, 700 பரிசு என அறிவித்துள்ளது.
பேய்ப்படத்தை தனியாக பார்த்தால் மனிதனின் ரத்த ஓட்டம், ஹார்ட் பீட் போன்றவை எந்த அளவு செயல்படுகிறது உள்ளிட்ட பல்வேறு உடல் ஆய்வுகளுக்காகத்தான் இந்த ஆய்வை அந்த நிறுவனம் நடத்துகிறதாம்.







