---Advertisement---

நடிகர் அக்சய்குமாரின் தாய் மறைவு

Published on: September 8, 2021
---Advertisement---

பிரபல ஹிந்தி நடிகர் அக்சய்குமார் இவர் தமிழில் எந்திரன்2 படத்தில் ரஜினிகாந்துடன் நடித்தார். இப்படத்தில் இவரது வேடம் சிறப்பாக பேசப்பட்டது. இந்த படத்துக்கு லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா படத்தின் ஹிந்தி ரீமேக்கான லக்‌ஷ்மி ஃபாம் படத்திலும் இவர் நடித்தார் இதன் மூலமும் தமிழ் ரசிகர்களால் அக்சய்குமார் அறியப்பட்டார்.

இவரின் தாய் அருணா பாட்டியா உடல் நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.

இது குறித்து அக்சய்குமார் வெளியிட்டிருந்த அறிக்கையில்

அவள் என் மையமாக இருந்தாள். இன்று என் இருப்பின் மையத்தில் தாங்க முடியாத வலியை உணர்கிறேன். என் அம்மா ஸ்ரீமதி அருணா பாட்டியா இன்று காலை அமைதியாக இந்த உலகத்தை விட்டு வெளியேறி, என் தந்தையுடன் வேறு உலகில் சேர்ந்தார். இந்தக் காலப்பகுதியில் நானும் எனது குடும்பத்தினரும் உங்கள் பிரார்த்தனைகளை மதிக்கிறேன். ஓம் சாந்தி என கூறி இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.