கடந்த 2015ம் ஆண்டு வெளிநாட்டிலிருந்து தனுஷ் புது கார் ஒன்றை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி விதிக்கப்பட்டது.
காருக்கு 60 லட்சத்து 66 ஆயிரம் ரூபாயை நுழைவு வரியாக செலுத்த வணிக வரித்துறை உத்தரவிட்டதை எதிர்த்து தனுஷ் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், 50 சதவீத வரியை செலுத்தும் பட்சத்தில் காரை பதிவு செய்ய வட்டார போக்குவரத்து அலுவலகத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து தனுஷ் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம் சுப்ரமணியம் நுழைவு வரியை செலுத்தியே ஆக வேண்டும் என உத்தரவிட்டது. மேலும் தனுஷ் ஏன் மனுவில் தான் ஒரு நடிகர் என ஏன் குறிப்பிடவில்லை என சரமாரியாக கேள்வி கேட்டுள்ளார்.
திங்கட்கிழமைக்குள் தனுஷ் வரியை செலுத்த வேண்டும் என நீதிபதி கூறியுள்ளார்.







