---Advertisement---

நடிகர் ஆர்யா மீதான மோசடி- கோர்ட் புதிய உத்தரவு

Published on: July 29, 2021
---Advertisement---
நடிகர் ஆர்யா மீது பண மோசடி புகார் விசாரணை நிலைகுறித்து விளக்கம் தர வேண்டும் என சிபிசிஐடிக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
திருமணம் செய்து கொள்வதாக கூறி 70 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக நடிகர் ஆர்யாவுக்கு எதிராக ஜெர்மனியை சேர்ந்த விட்ஜா என்ற பெண் தரப்பில் சிபிசிஐடியிடம் புகார் அளிக்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய சிபிசிஐடிக்கு உத்தரவிடக்கோரி விட்ஜா சார்பில் அவரது பொது அதிகாரம் பெற்ற ராஜபாண்டியன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்த நடிகர் ஆர்யா 70 லட்சத்திற்கு ரூபாய் க்கு (சுமார் 30000 யூரோ) மேல் பணம் பெற்றுக்கொண்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
பணத்தை திரும்ப கேட்டபோது, தன்னுடைய வீட்டுக்கடன் அனைத்தையும் செலுத்தி விடுவதாக மணப்பெண்ணும் நடிகையுமான சாயிஷாவின் பெற்றோர் உறுதியளித்ததால் மட்டுமே திருமணத்துக்கு சம்மதித்ததாகவும், 6 மாதத்தில் விவாகரத்து பெற்று விட்ஜாவை திருமணம் செய்து கொள்வதாக நடிகர் ஆர்யா பொய் வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ளார் என்று கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆனந்தன், நடிகர் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் அரண்மனை-3, இரண்டகம் என்ற மலையாள படங்கள் வெளியானால் தனக்கு வர வேண்டிய பணம் கிடைக்காமல் போய்விடும். சிபிசிஐடியிடம் கொடுத்த புகார் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, அரசு தரப்பு வக்கீல், புகார் மீதான தற்போதைய நிலை குறித்து பதில் அளிக்க கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்ற நீதிபதி விசாரணையை ஆகஸ்ட் 17ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
இதையும் படிக்க தவறாதீர்கள்:  வெளியானது ரஞ்சித் ஆர்யா படத்தின் பர்ஸ்ட் லுக்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Editorial visual featuring Dhanush and Director Ram.

தனுஷ் – இயக்குநர் ராம் கூட்டணியில் உருவாகவிருந்து கைவிடப்பட்ட படம்: சுவாரஸ்யத் தகவலை வெளியிட்ட இயக்குநர்!

Conceptual graphic representing Ajith Kumar's strategic financial plan for Gladiators and Daredevil.

Ajith’s Gladiators: ரேசிங் டாக்குமெண்டரி மூலம் அஜித்தின் புதிய மாஸ்டர் பிளான்!: ‘கிளாடியேட்டர்ஸ்’ லாபத்தைக் கொண்டு ‘டேர்டெவில்’ படத்தைத் தயாரிக்கத் திட்டம் – லேட்டஸ்ட் சினிமா பஸ்!

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம் - மாணவிக்கு கிடைத்த 7 ஆண்டுகால நீதி.

ரயில்வே இழப்பீடு 9.1 லட்சம்: தேர்வு மிஸ்ஸான மாணவிக்கு 7 ஆண்டு போராட்டத்திற்குப் பின் நீதி!

விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தில் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் கேமியோ காட்சி.

லோகேஷ் கனகராஜ் நடிப்பு! ‘ஜன நாயகன்’ படத்தில் பரபரப்பு அப்டேட்!

director atlee priya second pregnancy announcement

மீண்டும் தந்தையாகும் அட்லீ! கியூட் புகைப்படங்களுடன் இரண்டாவது கர்ப்பத்தை அறிவித்த பிரியா அட்லீ!

சினிமாவின் சமீபத்திய செயல்பாடுகளை அடித்து துவம்சம் செய்யும் தயாரிப்பாளர்