---Advertisement---

ஹிப்ஹாப் தமிழாவின் யூ டியூப் சேனல் மீட்பு

Published on: July 27, 2021
---Advertisement---

தமிழில் வித்தியாசமான இசையமைப்பாளராக வலம் வருபவர் ஹிப் ஹாப் ஆதி. 2017ஆம் ஆண்டு சுந்தர்.சி தயாரிப்பில் ‘மீசைய முறுக்கு’ என்ற படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தார்.

தற்போது ‘சிவகுமாரின் சபதம்’ என்ற படத்தை இயக்கி, அதில் நாயகனாகவும் நடித்து வருகிறார் சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது.  அந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் நேற்று ஹிப் ஹாப் ஆதியின் யூடியூப் பக்கம் மர்ம நபர்களால் முடக்கப்பட்டது. அதிலிருந்த அவரது ஏராளமான ஆல்பம் பாடல்கள் அனைத்தும் மாயமாகின. 20 லட்சம் சப்ஸ்கிரைபர்களைக் கொண்ட அந்த சேனலில் பெயரும் மாற்றப்பட்டது. இது அவரது ரசிகர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழலில் நேற்று இரவு அவரது யூடியூப் பக்கம் மீண்டும் மீட்கப்பட்டது. அதிலிருந்து வீடியோக்களும் தற்போது மீண்டும் அப்பக்கத்தில் இடம்பெற்றுள்ளன. இதனை ஹிப் ஹாப் ஆதி தன்
ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ‘நான் மீண்டும் வந்துவிட்டேன். உங்கள் அன்புக்கு நன்றி’ என்று குறிப்பிட்டுள்ள ஆதி, யூடியூப் நிறுவனத்துக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Music maestro Ilaiyaraaja composing for the upcoming movie Valmiki Ramayana directed by Bhavna Talwar.

Valmiki Ramayana : “ராமாயணத்திற்கு இசையமைக்கும் இசைஞானி” – இளையராஜா – ஆனந்த் நீலகண்டன் கூட்டணியில் புதிய காவியம்; ரிலீஸ் எப்போது?

Actor Salman Khan and Director Vamshi Paidipally at the official pooja ceremony of their new film produced by SVC.

Salman – Vamshi : “சல்மான் கான் – வம்சி பைடிபள்ளி கூட்டணியில் மெகா புராஜெக்ட்” – மும்பையில் பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு; தில் ராஜுவின் பிரம்மாண்ட தயாரிப்பு!

Music composer Sai Abhyankkar and actress Kayadu Lohar in a still from Pavalamalli song celebrating 100 million views.

Pavazha Malli Record : “10 கோடி இதயங்களை வென்ற பவழமல்லி” – யூடியூபில் மெகா சாதனை படைத்த சாய் அபியங்கர்; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

Official poster of Thalapathy Vijay's Jana Nayagan movie with KVN Productions logo.

Jana Nayagan Update : “ஏப்ரல் 30-ல் ஜன நாயகன் வருகிறாரா?” – சென்சார் போர்டுக்கு செல்லும் விஜய் படம்; விநியோகஸ்தர்களைச் சந்திக்க சென்னை வரும் தயாரிப்பு நிறுவனம்!

Superstar Rajinikanth and Director Nelson Dilipkumar at the Jailer 2 wrap-up party with actor Vasanth Ravi.

Jailer 2 Update : “13 மாத காத்திருப்பு முடிந்தது” – ஜெயிலர் 2 படப்பிடிப்பு நிறைவு; பிளாஷ்பேக் காட்சியில் வசந்த் ரவி? நெல்சன் வைத்திருக்கும் சர்ப்ரைஸ்!

Bodyguard Nayeem Moosa holding Actor Vijay's hand in a viral social media post about TVK movement.

TVK Movement : “நாளை தமிழகத்தின் இதயங்களை ஆள்வார்” – விஜய்யின் கையைப் பிடித்து மெய்க்காப்பாளர் போட்ட உருக்கமான பதிவு; வைரலாகும் புகைப்படம்!