ஆர்யா-விஷால் இருவரும் இணைந்து நடிக்கும் எனிமி டீசர் நேற்று வெளியானது
‘அவன் இவன்’ படத்துக்கு பிறகு, நடிகர் விஷால் மற்றும் ஆர்யா கூட்டணியில் நடிக்கும் திரைப்படம் ‘எனிமி’. இப்படத்தை விக்ரமின் ‘இருமுகன்’ படத்தை இயக்கிய ஆனந்த் சங்கர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஹீரோவாக விஷாலும், வில்லனாக ஆர்யாவும் நடித்துள்ளனர். விஷாலுக்கு ஜோடியாக மிருணாளினியும், ஆர்யாவுக்கு ஜோடியாக மம்தா மோகன்தாசும் நடிக்கின்றனர்.







