அந்தக்காலங்களில் சினிமாவில் பிரபலமானவர் நடிகை கவிதா. 80கள் 90களில் வந்த பல படங்களிலும் குணச்சித்திர மற்றும் அம்மா வேடங்களிலும் கவிதா நடித்துள்ளார். கடந்த வாரம் இவரது மகன் கொரோனா தொற்றால் பலியானார்.
இது இவர்களது குடும்பத்தினருக்கு மனவேதனை அளித்த நிலையில், கவிதாவின் கணவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது அவரும் இன்று கொரோனா தொற்றுக்கு பலியானது சினிமாத்துறையில் பலருக்கும் மிகுந்த மனவேதனையை ஏற்படுத்தியுள்ளது.







