நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக பெரும் வெற்றி பெற்றது. இதில் திமுக தலைவரின் மகனும் இளைஞரணி தலைவருமான உதயநிதி ஸ்டாலினும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ ஆக இருக்கிறார்.
இந்த நிலையில் முதல்முறையாக தேர்தலில் களம் கண்டு வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.







