---Advertisement---

கோவையில் நமீதா வாக்கு சேகரிப்பு

Published on: March 27, 2021
---Advertisement---

கோவை தெற்கு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வானதி சீனிவாசன் போட்டி இடுகிறார். இங்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். சமீபத்தில் சில மாதங்களுக்கு முன் பாஜகவில் இணைந்தவர் நடிகை நமீதா.

பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் நமீதா. இவர் தமிழகத்தில் நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் வானதி சீனிவாசனை ஆதரித்து இவர் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

உங்களுக்காக சேவை செய்யும் வானதி சீனிவாசனுக்கு வாக்களியுங்கள். அவர் வெற்றி பெற்றால், மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் உங்களது வீடு தேடி வரும். கோவையில் தாமரை மலரும், தமிழ்நாடு வளரும்’’ என்றார். பிரச்சாரத்தின்போது, இளைஞர்களுடன் நடனமாடிய நமீதா, “மச்சான்ஸ்… தாமரைக்கு ஓட்டுப் போடுங்க” என்றார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.