---Advertisement---

மறக்க முடியாத விகே ராமசாமி

Published on: March 23, 2021
---Advertisement---

மனம் கவர்ந்த வி.கே ராமசாமி வி.கே ராமசாமி அவர்கள் விருது நகரில் 1920களில் பிறந்தார் 1947ம் ஆண்டு வெளிவந்த நாம் இருவர் படத்தில் அறிமுகமானார் சுதந்திர போராட்ட காலமாதலால் இப்படத்தில் தேசபக்தி சற்று தூக்கலாக இருக்கும் இப்படத்தில் வி,கே,ஆரை பார்க்கும்போது நாகேஷ் மாதிரி ஒல்லியான உடல் வாகுடன் இருப்பார் அடுத்ததாக கலைஞரின் வசனத்தில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த பராசக்தி படத்தில் மனைவியை சினிமாவுக்கு அனுப்பிவிட்டு தவறான வேலைகள் செய்யும் வில்லன் தோற்றத்தில் நடித்திருப்பார்.

வில்லன் நகைச்சுவை குணச்சித்திரம் என அனைத்திலும் கலக்கியிருப்பார் வேலைக்காரன் திரைப்படத்தில் அடேய் ராஸ்கோலு ராஸ்கோலு என ரஜினிகாந்தை கூப்பிடுவாதாகட்டும் வருஷம் 16 படத்தில் இதெல்லாம் என்ன புள்ளையோ மூஞ்சியப்பாரு நல்லா ஆனந்த விகடன் அட்டைப்படம் மாதிரி என இவர் பேசும் வசனமாகட்டும் அவ்வளவு சீக்கிரம் மறந்து விடக்கூடியதல்ல அரங்கேற்ற வேளை படத்தில்சக்தி நாடக சபா என வைத்துக்கொண்டு பிரபுவுடனும் ரேவதியுடனும் அடிக்கும் லூட்டியில் தியேட்டரே அதிரும் அக்னி நட்சத்திரத்தில் ஜனகராஜுடன் சேர்ந்து படம் பார்க்கும் காட்சி நல்ல நகைச்சுவை.

பாலு மகேந்திரா இயக்கத்தில் வந்த உன் கண்ணில் நீர் வழிந்தால் படத்தில் சபலமுள்ள போலீஸ் ஏட்டாக நடித்திருப்பார். தர்மத்தின் தலைவன்,வருஷம்16 உட்பட பல படங்களில் குணச்சித்திர நடிகராக சிறப்பாக தன் நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.

கலைஞானி கமலஹாசனுடன் இவர் நடித்த மகராசன் திரைப்படம் எல்லோருக்கும் மிகவும் பிடித்தது ரகசியம் சொல்ல வரும் மனைவி திரும்ப கோமா நிலைக்கு சென்று விட அவஸ்தையில் விழி பிதுங்கும் கேரக்டரில் கூடவே நம்ம கமல்,கவுண்டர்,செந்தில் நகைச்சுவைக்கு கேட்கவா வேணும்.

அரங்கேற்ற வேளை திரைப்படமும் இவர் நடிப்பில் மறக்க முடியாத திரைப்படமாகும்.

வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் கட்டபொம்மனை காட்டிக்கொடுக்கும் எட்டப்பனாக நடித்து எட்டப்பன் கேரக்டருக்கு உயிர் கொடுத்தார் அருணாச்சலம் படத்தில் ரகுவரன் உட்பட ஐந்து வில்லனில் ஒருவராக அதுவும் அப்பாவி வில்லனாக நடித்திருப்பார் கடைசி காலக்கட்டங்களில் இவர் நடித்த டும் டும் டும் படத்தில் கூட காது கேட்காதவராக கலக்கியிருப்பார் பல படங்களில் வில்லனாக நகைச்சுவை நடிகராக குணச்சித்திர நடிகராக நடித்த வி.கே.ஆர் அவர்கள் 2002ம் ஆண்டு மறைந்தார் திரையுலகம் இருக்கும் வரை மறந்துவிட முடியாத நடிகர் இவர்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

ஏஐ மார்பிங் மற்றும் டீப்ஃபேக் விவகாரம் குறித்து நடிகர் ஜூனியர் என்டிஆர் கண்டனம் தெரிவித்த செய்திப் படம்.

தேவரா பட பாடல் மார்பிங் விவகாரம்: ஏஐ தொழில்நுட்ப துஷ்பிரயோகத்திற்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் கடும் கண்டனம்!

இசையமைப்பாளர் டி.ராஜேந்தர் மற்றும் இளையராஜா கூட்டணி குறித்துப் பேசும் செய்திப் படம்.

சுயமரியாதையை எதற்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டேன்: இளையராஜாவை பாட வைத்தது குறித்து டி.ராஜேந்தர் சுவாரஸ்ய தகவல்!

Official announcement visual layout for the new film collaboration between director Ashwin Saravanan and Attakathi Dinesh.

மாயா, கேம் ஓவர் இயக்குநருடன் கைகோர்க்கும் அட்டகத்தி தினேஷ்: புதிய படத்தின் அதிரடி அறிவிப்பு!

Media visual highlighting Sun TV acquiring the satellite rights for Dhanush's OM.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய சன் டிவி!

Director Shankar praising Baththa movie poster.

விஜய் சேதுபதியின் ‘பத்தா’ படத்தைப் பார்த்து வியந்த இயக்குநர் ஷங்கர்: சிறுவனின் நடிப்பு தேசிய விருதுக்குத் தகுதி!

Dhanush D56 movie production announcement poster.

126 கோடி பட்ஜெட்டில் தனுஷின் ‘D56’: இசையமைப்பாளராக களமிறங்கும் சாய் அபியங்கர்!