தலைப்பை பார்த்து அதிர்ந்து விடாதீர்கள். ஏற்கனவே ரஜினி நடிக்கும் அண்ணாத்தே படம் அப்படியே நிற்கிறது இதில் புதிய படமா அதுவும் ஏ வெங்கடேஷ் ரஜினியை வைத்து இயக்குகிறாரே என ஆச்சரியப்படாதீர்கள் இது எதுவுமே இல்லை.
குத்து, ஏய் , மஹாபிரபு உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் ஏ.வெங்கடேஷ் தற்போது ‘ரஜினி’ என்ற பெயரில் படம் இயக்க இருக்கிறார் . இந்தப் படத்தில் விஜய் சத்யா நாயகனாக நடிக்கவுள்ளார். நாயகியாக கைநாட் அரோரா நடிக்கவுள்ளார். இதர நடிகர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒளிப்பதிவாளராக மனோ வி.நாராயணன், இசையமைப்பாளராக அம்ரிஷ், கலை இயக்குநராக ஏ.பழனிவேல் ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.
த்ரில்லர் மற்றும் ஆக்சன் படமாக இது உருவாக இருக்கிறது.







