இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் பொங்கலுக்கு வர இருக்கும் திரைப்படம் ஈஸ்வரன். இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடிக்கிறார். இப்படத்தில் முக்கிய வேடத்தில் இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் நடிக்கிறார்.
இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று நடந்தது இதில் பேசிய பாரதிராஜா என் மகன் மனோஜ் இதில் சிறப்பாக நடித்திருக்கிறார் சில காட்சிகளை பார்த்து கண்கலங்குவது போல் உள்ளது. மனோஜை வைத்து நானும் தாஜ்மஹால் உட்பட பல படங்களை எடுத்து பார்த்தேன் சரியாக எதுவும் இல்ல.
இந்த படத்தில் அவர் சிறப்பாக நடித்திருக்கிறார் என மகன் மனோஜுக்கு புகழாரம் சூட்டியுள்ளார் பாரதிராஜா.









