---Advertisement---

பிரசாத் ஸ்டுடியோவுக்குள் செல்ல இளையராஜாவுக்கு அனுமதி

Published on: December 23, 2020
---Advertisement---

இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலம் பயன்படுத்தி வந்த பிரசாத் ஸ்டுடியோ , அதன் நிர்வாகிக்கும் இசைஞானி இளையராஜாவுக்கும் ஏற்பட்ட பிரச்சினைகளால் இளையராஜா ஸ்டுடியோவை காலி செய்ய வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ சொல்லி இருந்த நிலையில் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் இளையராஜா. வழக்கு நடந்து வரும் இவ்வேளையில் தான் அங்கு சில மணி நேரம் தியானம் செய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார் இளையராஜா.

அப்படி என்றால் அவர் வழக்கை வாபஸ் பெற வேண்டும் என பிரசாத் ஸ்டுடியோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் வழக்கை வாபஸ் பெற இளையராஜா சம்மதித்த நிலையில் நீதிமன்றம் அவர் பிரசாத் ஸ்டுடியோவுக்கு செல்ல உத்தரவிட்டுள்ளது.

காலை 9மணி முதல் 4 மணி வரை இளையராஜா அங்கு இருக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.