நடிகர் தனுஷ் சில வருடம் முன்பு ப்ரெஞ்சு மொழி படம் ஒன்றில் நடித்திருந்தார். தமிழ் தவிர ஹிந்தி மொழியில் தனுஷ் நடித்திருந்தாலும் இந்திய மொழியை தாண்டி வேறு நாட்டுமொழியான பிரெஞ்சு படமான ஜார்னெய் ஆஃப் பக்கீரில் தனுஷ் நடித்தது பாராட்டு பெற்றது.
இந்த நிலையில் தனுஷ் ஆங்கில படத்தில் நடிக்க இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்போது அவெஞ்சர்ஸ், எண்ட் கேம் படங்களை இயக்கிய ஆங்கில இயக்குனர்களின் ஆங்கில படத்தில் தனுஷ் நடிக்கிறார். ரையன் கோஸ்லிங், கிறிஸ் எவன்ஸ், உள்ளிட்ட ஆங்கில நடிகர்களுடன் இணைந்து தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தை நெட்ப்ளிக்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.







