தமிழில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தவர் வித்யா பாலன். அதிகமான ஹிந்தி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக விளங்கியவர் வித்யாபாலன். இவர் தற்போது ஷேர்னி’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மத்திய பிரதேச மாநிலம் பால்காட் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக கடந்த இரு வாரங்களுக்கு முன்பு வித்யா பாலன் அங்கு சென்றிருந்தார்.
அங்கு சென்ற இப்படக்குழுவினர் படப்பிடிப்புக்கு வனத்தில் அனுமதி கேட்டதாகவும் ஆனால் அனுமதி கொடுக்காமல் வனத்துறை புறக்கணித்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக நடிகை வித்யா பாலனை அமைச்சர் விஜய் ஷா இரவு விருந்தில் கலந்து கொள்ளுமாறு கூறியதாகவும் ஆனால் நடிகை வித்யாபாலன் மறுத்து விட்டதால் வனத்துறை படப்பிடிப்புக்கு அனுமதி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இது பற்றி கூறிய அமைச்சர் விஜய் ஷா, ‘படப்பிடிப்புக்கு அனுமதி கேட்க என்னை அணுகினர். அவர்கள் தான் இரவு விருந்துக்கு என்னை அழைத்தனர். படப்பிடிப்பை நிறுத்த நான் உத்தரவிடவில்லை’ என்றார்.







