---Advertisement---

ஹரி இயக்கும் படத்தில் அருண் விஜய் நடிக்கிறாரா?

Published on: December 1, 2020
---Advertisement---

அருண் விஜய் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அதிகமான ஆக்சன் படங்களில் நடித்து வரும் அவர் இயக்குனர் ஹரி இயக்கும் படத்தில் நடிக்க இருப்பதாக பத்திரிக்கைகள் சில மாதத்துக்கு முன் செய்தி வெளியிட்டிருந்தன.

அதற்கான அறிகுறிகளே தெரியாத நிலையில் , ஹரி தற்போது விக்ரமை வைத்து படம் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சூர்யாவை வைத்து இயக்க இருந்த படம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில்தான் அருண் விஜய் படம் பற்றி பேசப்பட்ட நிலையில் இப்போது அதுவும் இல்லை என்று தகவல்கள் கூறுகின்றன.

 

மீண்டும் ஹரி வெற்றி கொடுத்த விக்ரமுடன் தான் இணைய இருக்கிறாராம்.எனினும் இது பற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வரவில்லை.

ஏற்கனவே விக்ரமை வைத்து சாமி, சாமி ஸ்கொயர், அருள் உள்ளிட்ட படங்களை ஹரி இயக்கி இருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.