கால்பந்து விளையாட்டின் அசைக்க முடியாத சக்தியாய் விளங்கியவர் மாரடோனா.கடந்த சில தினங்களுக்கு முன் தன்னுடைய 60வது பிறந்த நாளை மாரடோனா கொண்டாடியுள்ளார்.
அதன் பிறகு உடல் சோர்வுடன் காணப்பட்ட அவரை மருத்துவமனையில் அனுமதித்து பரிசோதித்துள்ளனர் அவரது மூளையில் கட்டி இருப்பதாக மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டது.
பிறகு அதற்கான மருத்துவ சிகிச்சைகள் செய்யப்பட்டு அது வெற்றிகரமாக இருந்த நிலையில் மாரடோனா வீடு திரும்பினார்.
இந்த நிலையில் நேற்று காலை நெஞ்சு வலி ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார் இருப்பினும் அவரை காப்பாற்ற முடியவில்லை.
1986ஆம் ஆண்டில் அர்ஜென்டீனாவுக்கு இரண்டாவது உலக கோப்பை கிடைப்பதில் மாரடோனாவின் அபாரமான ஆட்டம் காரணமாக இருந்தது. அப்போது அவரது தாய்நாடான அர்ஜென்டீனா மேற்கு ஜெர்மனியை எதிர்கொண்டது.
இவரது மறைவுக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலக முக்கிய பிரமுகர்கள் டுவிட்டரில் தனது வருத்தத்தை பதிவு செய்து வருகின்றனர்.
பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்டோர் இவரது மறைவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளனர்.








