சென்னைக்கு வெளியே 700 கிமீ தொலைவில் மையம் கொண்டுள்ள நிவர் புயல் சென்னையை நெருங்குவதால் நாளை பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்புள்ளது தெரிய வந்துள்ளது.
மற்ற மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நிவர் புயலால் சென்னையில் பாதுகாப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
நாளை உருவாகி வரும் புயல் நாளை மறுதினம் நவம்பர் 25ல் காரைக்காலுக்கும், மகாபலிபுரத்துக்கும் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது அந்த நேரத்தில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், அரியலூரில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
புயல் வழுவிழந்தாலும் அது காரைக்காலுக்கும் வேதாரண்யத்துக்கும் இடையே கரையை கடக்கும் அப்போதும் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.







