---Advertisement---

ஒட்டுமொத்த ஸ்டுடியோவையும் வாடகைக்கு எடுத்த ஹிந்திப்பட குரூப்

Published on: November 11, 2020
---Advertisement---

ஹிந்தியில்இயக்குநர் ரோஹித் ஷெட்டி என்பவர் இயக்கும் படம்   ’சர்க்கஸ்’  ரன்வீர் சிங் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்பட படப்பிடிப்புக்காக மும்பையில் இருக்கும் மெஹ்பூபா என்ற ஸ்டூடியோவை மொத்தமாக வாடகைக்கு எடுத்துள்ளனர் படக்குழுவினர்.

இதில் பூஜா ஹெக்டே, ஜாக்குலின் பெர்னாண்டாஸ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர் முதன்முறையாக இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் ரன்வீர் சிங் நடிக்கிறார் .இது குல்ஸார் இயக்கத்தில் 1982-ம் ஆண்டு வெளியான ‘அங்கூர்’ என்கிற இந்திப் படத்தின்  ரீமேக் எனத் எனத் தகவல் வெளிவந்துள்ளது இருப்பினும் படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இல்லை.

தற்போது இந்தப் படத்தின் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக யாஷ் ராஜ் ஸ்டூடியோவிலும் அடுத்தது பாந்த்ரா பகுதியில் இருக்கும் மெஹ்பூப் ஸ்டூடியோவிலும் படப்பிடிப்பு நடக்கிறது. தற்போது அங்கு அரங்கம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஹைதராபாதின் ராமோஜி ராவ் ஸ்டூடியோவிலும் சில நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது கோவா ரோஹித் ஷெட்டிக்கு ராசியான ஊராம் அதனால்  கோவாவிலும், ஊட்டியிலும் சில நாட்கள் படப்பிடிப்பு திட்டமிடப்பட்டுள்ளது.

பிறக்கும் போதே பிரிந்து போன இரண்டு ஜோடி இரட்டையர்கள் மீண்டும் ஒன்றாகச் சேரும்போது நடக்கும் நகைச்சுவைக் குழப்பங்களே இந்தப் படம். டி சீரிஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்மெண்ட்ஸ் மற்றும் ரோஹித் ஷெட்டி ஆகியோர் இந்தப் படத்தைத் தயாரிக்கின்றனர். அடுத்த வருடம் இரண்டாம் பாதியில் படம் வெளியாகும் என்று தெரிகிறது.

 

 

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.