---Advertisement---

ஆடு திருடி மாட்டிக்கொண்ட திருட்டு நடிகர்கள்

Published on: November 9, 2020
---Advertisement---

சென்னை மாதவரத்தை சேர்ந்த பழனி என்பவர் வளர்த்த ஆடுகள் சில நாட்களாக ஒன்றன் பின் ஒன்றாக காணாமல் போய் இருக்கின்றன இது சம்பந்தமாக போலீசார் கண்காணித்து வந்த நிலையில் ஆடு திருடுபவர்கள் காரில் வந்து திருடுகிறார்கள் என்பது மட்டும் நன்கு புரிந்தது.

இதை தொடர்ந்து மாறுவேடத்தில் போலீசார் ஆடு திருடர்களை கண்காணித்து வந்த நிலையில் சனிக்கிழமை அன்று காரில் வந்த இருவர் சாலையில் படுத்துக்கிடந்த ஆட்டை லாவகமாக திருடும்போது போலீசார் அவர்களை லாவகமாக பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் இருவரும் சினிமாவில் நடித்தவர்கள் என்பது தெரிய வந்தது. நடித்தவர்கள் மட்டுமல்ல , தயாரிப்பாளர்கள் என்பது தெரிந்தது. ஆடு திருடிய நிரஞ்சன், லெனின்குமார் இருவரும் தனது தந்தை தயாரித்த நீதான் ராஜா படத்தில் நடித்துள்ளனர் படம் தயாரித்த வகையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது கிடைத்த லாபத்தை தந்தையும் தராததால் ஆடு வியாபாரம் செய்கிறேன் என இப்படி குறுக்கு வழியில் இறங்கியுள்ளனர் கடந்த 3 வருடமாக இதே வேலையை அவர்கள் செய்து வந்திருக்கின்றனர் இப்போது போலீஸ் வலையில் சிக்கியுள்ளனர்.

இதையும் படிக்க தவறாதீர்கள்:  ஆடு திருடர்களால் கொல்லப்பட்ட எஸ்.ஐ உடல் அடக்கம்

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.