---Advertisement---

கோவிலுக்குள் வந்து செல்லும் முதலை- ஆன்மிக அதிசயம்

Published on: October 23, 2020
---Advertisement---

கேரளாவில் உள்ள காசர் கோட் மாவட்டத்தில் அனந்தபுரா என்ற அழகிய கிராமத்தில் அனந்த பத்மநாப சுவாமி கோவில் உள்ளது. இக்கோவில் குளத்தில் 70 ஆண்டுகளாக ஒரு முதலை உள்ளதாம். பபியா என பெயரிடப்பட்டு உள்ள அந்த முதலை வழக்கமான முதலைக்கென்று உள்ள மூர்க்க குணங்களுடன் இருக்காதாம். மிகவும் சாதுவான அந்த முதலை குளத்தில் உள்ள மீன்களை கூட சாப்பிடுவதில்லையாம்.

அந்த முதலைக்கு பூஜை செய்யப்பட்ட முசலி நெய்வேத்யம் உணவாக அளிக்கப்பட்டு வருகிறது. அதில் மாமிசம் ஒன்றும் இல்லை. அவல், வெல்லம் வாழைப்பழம் கலந்த சாப்பாடுதான் தரப்படுகிறது.

இக்கோவில் முதலை கோவில் பூசாரியின் சொல்லுக்கு கட்டுப்படுமாம். அடிக்கடி கோவிலுக்குள் வந்து சிறிது நேரம் இருந்து விட்டு செல்லுமாம். சமீபத்தில் கூட கோவிலுக்குள் வந்து சிறிது நேரம் இருந்ததை யாரோ புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த முதலை தெய்வீக முதலையாக அந்த பகுதி மக்களால் பார்க்கப்படுகிறது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.