சிவாஜி கணேசன், கே.ஆர் விஜயா நடிப்பில் கடந்த 1987ம் ஆண்டு இதே நாளான 1.11.67 தீபாவளி தினத்தன்று வெளியான திரைப்படம் ஊட்டி வரை உறவு. இயக்குனர் ஸ்ரீதரின் படங்கள் எல்லாம் வரவேற்பு பெற்ற காலமது அந்த நேரத்தில் ஸ்ரீதர் இயக்கிய இப்படமும் வந்து வெற்றி பெற்றது.
இப்படத்தில் எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் இடம்பெற்ற பூ மாலையில் ஓர் மல்லிகை, அங்கே மாலை மயக்கம், ராஜ ராஜஸ்ரீ ராணி வந்தாள்,தேடினேன் வந்தது, புது நாடகத்தில் போன்ற அனைத்து பாடல்களுமே மிகவும் ஹிட் ஆகின.
படத்தின் கதையும் கொஞ்சம் செண்டி மெண்ட் , கொஞ்சம் குழப்பங்கள் கலந்து காமெடியாகவும் சுவாரஸ்யமாகவும் சொல்லப்பட்டிருந்தது.
படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஊட்டியிலேயே படமாக்கப்பட்டிருந்தது.
இப்படம் வெளியாகி இன்றுடன் 54 வருடம் ஆகிறது.









