---Advertisement---

3 படங்கள் ; போயஸ்கார்டனில் ஒரு வீடு – ஜெயம் ரவி போட்ட கணக்கு!

By Sri
Published on: February 27, 2019
மூன்று படங்கள் ; போயஸ்கார்டனில் ஒரு வீடு - ஜெயம் ரவி போட்ட கணக்கு!
---Advertisement---

மூன்று படங்களில் தொடர்ந்து நடிப்பதற்கு பதிலாக போயஸ்கார்டனில் உள்ள வீட்டை நடிகர் ஜெயம் ரவி சம்பளமாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

சினிமா தயாரிப்பு நிறுவனமான ஸ்கிரீன் சீன் நிறுவனத்துக்கு தான் 3 படங்கள் தொடர்ந்து நடிக்க இருப்பதாய் சமீபத்தில் ஜெயம்ரவி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்த டீலுக்கு பின்னணியில் உள்ள விவகாரம் தெரியவந்துள்ளது. அந்த பட நிறுவனத்தின் முதலாளிக்கு போயஸ்கார்டனில் ஒரு வீடு இருக்கிறது. சமீபத்தில் அந்த பக்கம் சென்ற ஜெயம்ரவிக்கு அந்த வீடு பிடித்துப்போய் விட, இது யாருடையது என விசாரிக்க, விஷயம் தெரிந்தவுடன் 3 படம் நடித்து தருகிறேன். சம்பளத்திற்கு பதிலாக அந்த வீட்டை எழுதிக்கொடுத்து விடுங்கள் என ஜெயம் ரவி டீல் பேசினாராம்.இதற்கு அந்நிறுவனமும் ஒப்புதல் தெரிவித்து விட தற்போது அந்த நிறுவனத்துக்கு 3 படங்கள் தொடர்ச்சியாக நடித்துக்கொடுக்க ஜெயம்ரவி முடிவு செய்துள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.