---Advertisement---

சுகவாசி கவுண்டமணி!…அடிக்கடி மாத்திகிட்டே இருப்பாரு!…சென்டிமென்டுக்காக இதை வச்சிருந்தாரா?…அடேங்கப்பா!…

Published on: April 27, 2024
gountamani
---Advertisement---

நக்கல், நையாண்டி என தனக்கான ஒரு ட்ரெண்ட்டை கையில் எடுத்துக் கொண்டு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் கவுண்டமணி. அவருடைய இயற்கயான குணமும் அப்படித்தான் என சொல்லுவார்கள்.

அதனையே தனது திரைப்படங்களில் பிரதிபலிக்கச்செய்து வெற்றி கண்டவர். கதான்யகனாக கூட சில படங்களில் தலையை காட்டியுள்ள இவருக்கு படம் முழுவதும் வில்லனாக நடிக்க வேண்டும் என்ற  நிறைவேறாத ஆசையும் இருக்கிறதாம் இன்று வரை.

அவரிடம் பேசினால் அவர் நம்மை கலாய்த்து தள்ளி விடுவார் என அவரைக் கண்டு பயந்து ஒதுங்கியவர்களும் இருந்திருக்கிறார்களாம். நடிகர் செந்திலுடன் அதிகமான நெருக்கத்தை காட்டியுள்ளார். செந்திலும் இவருக்கு கொடுக்க வேண்டிய மதிப்பையும், மரியாதையையும் கொடுத்தும் வருகிறார்.

நடிப்பில் பிஸியாக இருந்து வந்த நேரத்திலும் கூட சினிமாவை பற்றி அதிகமாக கற்றுக்கொண்டாராம். கவுண்டமணி ஷூட்டிங் இல்லாத  போதெல்லாம் தமிழ் படங்களை பார்த்து வந்திருக்கிறார்.

சினிமாவை பற்றிய அதிகமான தகவல்களை தெரிந்து வைத்திருந்தவர். அவருக்கு தெரியாத படங்களே கிடையாது என்று சொல்லும் அளவில் கலைத்துறையை பற்றி அதிக அறிவு கொண்டிருந்திருக்கிறார்.

jeyaram gountamani
jeyaram gountamani

தனது சொந்த வாழ்வில் சுக போகமாக இருந்தும் வந்திருக்கிறார். கவுண்டமணியிடம் 5 முதல் 6 கார்கள் இருக்குமாம் அப்போதிலிருந்தே. கார்களை அடிக்கடி மாற்றும் பழக்கமும் இவரிடம் இருந்ததாம். தனது முதல் வருமானத்தில் வாங்கிய செயினை படங்களில் கூட அதிகமாக கழற்றி வைத்தது கிடையாதாம்.

 

அவர் படங்களின் காட்சிகளில் இதனை கவனித்திருக்கலாம். கழுத்தில் அணிந்திருக்கும் தங்க சங்கிலி அவருக்கு மிகவும் ராசியானதாம். எந்த சூழ்னிலையிலும் அதனை கழற்ற அப்படி யோசிப்பாராம் அவர். இந்த தகவல்களை பிரபல விமர்சகர் ‘செய்யாறு’ பாலு தெரிவித்திருந்தார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Official motion poster announcement of Mohanlal and Dileesh Pothan's 'Nedumkandam Miracle'.

மோகன்லால் – திலீஷ் போத்தன் கூட்டணியில் புதிய படம்! அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட ‘நெடுங்கண்டம் மிராக்கிள்’!

Vishnu Vishal talking about the struggles behind the movie Ratsasan.

17 ஹீரோக்கள் நிராகரித்த ‘ராட்சசன்’! நான் வெறும் ‘பேக்கப்’ தானா? மனமுடைந்து பேசிய விஷ்ணு விஷால்!

Dravid Selvam, actor and dialogue writer, working on his upcoming projects.

‘பரிதாபங்கள்’ டிராவிட் செல்வம் டபுள் என்ட்ரி! எழுத்தாளராகவும், நடிகராகவும் கோலிவுட்டை கலக்கும் ‘டியூட்’ பட புகழ் டிராவிட்

Parthiban and K Bhagyaraj at the South Indian Film Writers Association event.

விஷமிகளின் வாயை அடைத்த பார்த்திபன்! பாக்யராஜிற்கு கிடைத்த மிக உயரிய கெளரவம்.. எழுத்தாளர் சங்கத்தில் நடந்தது என்ன?

Minister Rajmohan helping actor Pava Lakshmanan with housing.

வீடில்லாமல் தவித்த பாவா லட்சுமணன்.. கண்ணீர் மல்க உதவிய அமைச்சர் ராஜ்மோகன்! நெகிழ்ச்சியான தருணம்!

Dhruv Vikram during the pooja ceremony launch of his bilingual film #DV4.

துருவ் விக்ரமின் அதிரடி அவதாரம்! தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் மிரளப்போகும் ‘DV4’.. அதிரடித் தொடக்கம்!