---Advertisement---

‘அஜித்’ பற்றி மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே!

By Sri
Published on: March 23, 2019
'அஜித்' பற்றி மனம் திறந்த ரங்கராஜ் பாண்டே
---Advertisement---

அஜித் நடித்து கொண்டு வரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படம், ஹிந்தியில் அமிதாபச்சன் நடித்த ‘பிங்’ திரைப்படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

வித்யாபாலன் இப்படத்தில் கதாயாகியாக நடிக்கிறார். வித்யாபாலனுக்கு இதுவே முதல் தமிழ் படம் என்பது குறிப்பிடத்தக்கது.ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரித்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து உள்ளார்.

ஷ்ரத்தா ஸ்ரீநாத், இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் செட் போட்டு இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

இந்நிலையில், தனது YouTube சேனலில், அஜித் பற்றி மனம் திறந்துள்ளார் ரங்கராஜ் பாண்டே. அவர் கூறியதாவது, அஜித் அனைவரும் கூறுவது போல், அற்புதமான மனிதராக இருக்கிறார். மிகவும் ஆச்சர்யப்பட கூடிய வகையில் பழகுகிறார்.

பழகக்கூடிய நண்பர்களுக்கு உயிரைக் கொடுக்க கூடிய இடத்தில் இருக்கிறார். நிறைய ஆச்சர்யம் நிறைந்த மனிதராக இருக்கிறார். நான் நிறைய அனுபவித்து இருக்கிறேன். 15 நாட்கள் காலை முதல் மாலை வரை அன்றாடம் அவருடன் இருக்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. அது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும் என தெரிவித்தார்.

Sri

ஸ்ரீ. இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 8 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் செய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.