---Advertisement---

விக்ரமனின் டச் ஆன படம் வித்யாசமான படமான கோகுலம் பார்த்து இருக்கிங்களா?

Published on: September 14, 2025
---Advertisement---

தமிழ் சினிமாவுக்கு விக்ரமனின் புது வசந்தம் ஒரு வித்யாசமான படம், ரசிகர்களுக்கும் புது வரவாய் அது இருந்தது, அது வரை  இது மாதிரி கதைகளை பார்க்காத மக்களுக்கு அது புதிதாய் இருந்தது. இந்த கதை வெற்றி அடைந்ததை தொடர்ந்து, தொடர்ந்து அது போல மனதுக்கு இதமாக மயிலிறகு தடவுவது போன்று படம் எடுக்க ஆரம்பித்தார்.

Gokulam

அவரின் இரண்டாவது படமான பெரும்புள்ளி பெரிய அளவில் பேசப்படாமல் போக, மூன்றாவது படமான கோகுலம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த முறையும் விக்ரமன் எடுத்துக்கொண்டது ஒரு பெண் சப்ஜெக்ட்தான் புது வசந்தத்தில் வந்த சித்தாரா போலவே அன்பான அழகான கதாபாத்திரமாக இதில் பானுப்ரியா நடித்து இருந்தார்.

ஒரு பெரிய குடும்பத்துக்கு அருகில் பானுப்ரியா வருகிறார், அந்த குடும்பத்தில் இருக்கும் பிரச்சினைகளை ஒவ்வொன்றாக தீர்க்கிறார், அந்த வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கல்யாணம் முடித்து வைப்பது முதல் அந்த வீட்டில் இருக்கும் சகல பிரச்சினைகளையும் ஒரு தேவதை போல் தீர்த்து வைக்கிறார்.

யார் இவர் எதற்காக இப்படியெல்லாம் செய்ய வேண்டும் என ரசிகர்கள் யோசிக்கிறபோது, அந்த வீட்டு பிள்ளையான அர்ஜீனை நகரத்தில் பானுப்ரியா காதலித்து வருகிறார், எதிர்பாராமல் அர்ஜூன் மரணமடைய, அவரின் குடும்பத்து சிக்கலை தீர்த்து வைக்க வருகை புரிந்து இவ்வாறு செய்கிறார், அந்த  ஊரில் ஸ்டுடியோ வைத்திருக்கும் ஜெயராமுடனும் அவருக்கு நட்பு ஏற்படுகிறது.

 

சிற்பி இசையமைப்பில் புல்லாங்குழலை வைத்து சுத்தி அடிக்குது காத்து பாடல் பார்க்க கேட்க இரண்டுமே பரவசமாய் இருந்தது. ஜெயராமும், பானுப்ரியாவும் கடற்கரையில் நின்று பாடுவார்கள்.

 

அர்ஜூனின் அப்பாவாக கல்யாணகுமார் நடித்திருந்தார், அந்த குடும்பத்திற்கு உதவி செய்யத்தான் பானுப்ரியா வருவார்.

 

அது போல் புது ரோஜா பூத்திருக்கு, செவ்வந்தி பூ எடுத்து, அந்த வானம் என எல்லா பாடல்களும் நன்றாக இருந்தன. படத்திற்கு பலம் சேர்க்க வடிவேல் மற்றும் சின்னி ஜெயந்த் காமெடி நன்றாக இருந்தது. ஆர்.பி செளத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் இப்படத்தை புது வசந்தம் படத்திற்கு பிறகு மீண்டும் தயாரித்திருந்தது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.