---Advertisement---

முதலிடத்திற்கு முன்னேறிய விஜய்சேதுபதி?…அரண்மனையை ஆக்குப்பை பண்ணிய மகாராஜா!…

Published on: June 17, 2024
maharaja
---Advertisement---

விஜய்சேதுபதியின் 50 வது படமாக வெளிவந்தது “மகாராஜா”. விஜய்சேதுபதியின் அனாயாசிய நடிப்பில் படம் வேற லெவலுக்கு போகிவிட்டது. கடந்த ஐந்து வருடங்களாக வெற்றி படங்களை பெரிதாக கொடுக்காமலேயே இருந்து வந்தார் விஜய்சேதுபதி.

ஆனால் மகாராஜா”வின் மூலமாக தனது வெற்றித்தாகத்தை தீர்த்துக்கொண்டார் எனவே சொல்லலாம். நிதிலன் சுவாமிநாதனின் இயக்கம் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணாமாகவும் இருந்தது. அதோடு பின்னனி இசையும் பக்காவாக பொருந்தியிருந்தது.

எப்படியோ விட்ட இடத்தை பிடித்து விட்டார் விஜய்சேதுபதி என்று சொல்லும் படியாக தான் அமைந்து உள்ளது “மகாராஜா”.

maharaja
maharaja

2024 ஆண்டு வெளிவந்த படங்களில் ஒரே நாளில் அதிகமான டிக்கெட்டுகள் விற்பனை செய்த  படம் என்கின்ற சாதனையை செய்துள்ளது.

இதுவரை சுந்தர்.சி.யின் “அரண்மனை-4″தான் இந்த சாதனையை தன் வசம் வைத்திருந்தது. வெளியான முதல் நாளிலிருந்தே பாசிட்டிவான விமர்சனத்தை பெற்று வந்த நிலையில் நேற்று மட்டும் ஒன்பது கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது.

அதோடு படம் இதுவரை 21 கோடி ரூபாய் வரை வசூலித்ததாக சொல்லப்படுகிறது. வெளி நாடுகளில் இது வரை 25 கோடி ரூபாய் வரை கலெக்ட் செய்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இன்று பக்ரீத் விடுமுறை என்பதால் படத்தின் வசூல் கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இப்படியே சென்றால் படம் விரைவில் 100 கரோர் கிளப்பில் படம் இடம் பிடித்துவிடும் என சொல்லப்படுகிறது. இந்தாண்டு “அரண்மனை – 4” படம் மட்டுமே நல்ல கலெக்சன் பெறறிந்தைருந்தாக இருந்த நிலையில் “மகாராஜா” அந்த இடத்தை ஆக்குப்பை பண்ணிவிடும் என சொல்லப்படுகிறது. சூரி நடித்து வெளியான “கருடன்” படத்தின் வசூல் சாதனையையும் “மகாராஜா” முறியடித்து குறிப்பிடத்தக்கது.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.