---Advertisement---

காசு விஷயத்தில் கரார் காட்டும் அஜீத்…விடுதலை கிடைக்குமா விடாமுயற்சிக்கு?…

Published on: June 14, 2024
ajith
---Advertisement---

 

“குட் பேட் அக்லி” பட ஷூட்டிங் ரொம்ப வேகமா நடந்துக்கிட்டு வருகிறதாம். இது அஜீத் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தருகின்ற செய்தியாக இருந்து வருகிறது. அடுத்தடுத்த படங்கள் குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டு வருகிறாராம் அஜீத். இதுவும் அவரது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி வருகிறது.

சமீபத்தில் ஷங்கர்- அஜீத் பேச்சு வார்த்தை நடந்ததாக தகவல்கள் வந்தது. இது சந்தோஷத்தின் எல்லைக்கே கொண்டு போயிருக்கிறது அஜீத் ரசிகர்களை. இப்படி அடுக்கடுக்கான நல்ல செய்திகளை கொடுத்து வருகிறது அஜீத் குமாரின் திரை பயணம்.

வெங்கட் பிரபு சொன்னது போல கோலிவுட்டில் அதிகாமாக கேட்கப்பட்ட கேள்விகளில் ஒன்றான பிரேம்ஜிக்கு எப்போ கல்யாணம் என்பதற்கு கூட சமீபத்தில் பதில் கிடைத்து விட்டது.

vidaamuyarchi
vidaamuyarchi

ஆனால் இன்று வரை எவராலும் பதில் சொல்ல முடியாத கேள்வியாக இருப்பது “விடாமுயற்சி” ரிலீஸ் எப்போ?. தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகும் என சமீபத்தில் செய்திகள் வந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தள்ளி போக வாய்ப்பு இருப்பதாக பிரபல திரை விமர்சகர் ‘வலைப்பேச்சு’ அந்தணன் சொல்லியிருக்கிறார்.

படங்களில் சம்பளத்திற்கான ஒரு பெரும் தொகையை அட்வான்ஸாக  வாங்கிய பிறகு, மீதி இருக்கும் பணத்தை மாதா மாதம் தனது அக்கவுண்டில் போட சொல்வது அஜீத்தின் பழக்கமாம். “விடாமுயற்சி” பட தயாரிப்பு நிறுவனம் இதனை செய்ய தவறி விட்டதாம் சில மாதங்களாக.

இதனால் செட்டில்மென்ட் கேட்டு நிற்கின்றாராம் அஜீத். இதனால் படத்தின் மீதி ஷூட்டிங் பாதிக்கப்படும். அது நடந்தால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் எனவும் அந்தணன் சொல்லியிருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

Promotional poster featuring Keerthy Suresh for Karthik Subbaraj's action thriller Dorothy.

கார்த்திக் சுப்பராஜ் – கீர்த்தி சுரேஷின் ‘டோரதி’: தமிழக வெளியீட்டு உரிமையை கைப்பற்றிய முன்னணி நிறுவனம்!

Promotional banner celebrating the successful second-week run of Kavin and Nayanthara's Hi.

ஹாய் படம் வெற்றி நடை: இரண்டாவது வாரத்திலும் தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடும் கவின் – நயன்தாரா படம்!

Action-packed promotional poster of Soori's upcoming sea sports drama Mandaadi.

சூரியின் ‘மண்டாடி’ அதிரடி டிரெய்லர்: கடற்பரப்பு சண்டை மற்றும் படகுப் பந்தயத்துடன் வெளியானது மிரட்டலான முன்னோட்டம்!

Superstar Rajinikanth sporting a stylish look for his action entertainer Dharman.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘தர்மன்’: அதிரடியாக முடிந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பு – பொங்கலுக்கு ரிலீஸ் உறுதி!

Official announcement poster for Mani Ratnam’s upcoming film starring Vijay Sethupathi and Sai Pallavi.

மணிரத்னம் – ஏ.ஆர்.ரஹ்மான் காம்போ: விஜய் சேதுபதி, சாய் பல்லவி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் செப்டம்பர் 7-ல் வெளியீடு!

ரேசிங் உடையில் நடிகர் அஜித் குமாரின் 'கிளாடியேட்டர்ஸ்' பட போஸ்டர்.

அஜித் குமாரின் ‘கிளாடியேட்டர்ஸ்’ ஸ்பெஷல் ப்ரீமியர்: ரசிகர்களுக்காக வெளியாகிறது 3 நிமிட பைக் ரேஸ் டாக்குமெண்ட்ரி டிரெய்லர்!