புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடித்து கடந்த 1988 இல் வெளிவந்த திரைப்படம் உழைத்து வாழ வேண்டும் இப்படத்தை அமீர்ஜான் இயக்கியிருந்தார் அமீர்ஜான் பாலச்சந்தரின் சிஷ்யர்.
இப்படத்தில் விஜயகாந்த், ராதிகா மற்றும் பலரானோர் நடித்திருந்தனர். விஜயகாந்துக்கு புரட்சி வசனங்களை எழுதும் லியாக்கத் அலி கான் தான் இப்படத்தின் வசனங்களை எழுதி இருந்தார். இளையராஜா இசையில் பல வெற்றி படங்களை தயாரித்த கோவை தம்பி அவருடன் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகளால், சில காலம் அவருடன் இணைந்து பணியாற்றாமல் இருந்தார் அந்த நாட்களில் தேவேந்திரன் போன்ற இசையமைப்பாளர்களை வைத்து படம் தயாரித்தார்.
கோவை தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பு என்பதால் இப்படத்தில் அவரது கம்பெனி இசையமைப்பாளராக இருந்த தேவேந்திரனையே இப்படத்திற்கு இசையமைக்க வைத்திருந்தார். முத்துக்கள் பறிக்காத கண்ணில் வாங்கி வந்தேன் வாழைமரம் போன்ற பாடல்கள் இப்படத்தில் மிகச் சிறப்பாக இருந்தன. கோவை தம்பியின் படங்களுக்கு யார் இசையமைத்தாலும் அப்படத்தின் பாடல்கள் ஹிட்டானது என்பது ஒரு சிறப்பு.
சைக்கிள் ரிக்க்ஷா ஓட்டும் தந்தை, அடுத்த வீட்டில் பணி பெண்ணாக வேலை செய்யும் தாய், பூ விற்கும் தங்கை, செய்தித்தாள் போடும் தம்பி, இவர்களின் ஒரே நம்பிக்கையாக விஜயகாந்த் இருக்கிறார். விஜயகாந்த் பணக்கார திமிர் பிடித்த பெண்ணாக வரும் ராதிகாவை தனது வழக்கமான படங்களின் பாணியில் அடக்குகிறார். முதலில் மோதல் பின்பு காதல் பின்பு அது என்ன ஆகிறது விஜயகாந்த் தனது குடும்பத்தை எப்படி கரை சேர்த்தார் என்பது கதை.
மிக அழகான கமர்சியல் கதையாக கடந்த 1988 தீபாவளி தினத்துக்கு இப்படம் வெளிவந்தது.



