---Advertisement---

மிகுந்த கஷ்டங்களுடன் சிவாஜி நடித்த திருவருட்செல்வர் திரைப்படம்

Published on: September 23, 2025
---Advertisement---

தமிழ் சினிமா உலகில் சிவாஜிகணேசன் தான் நடிப்பின் சூப்பர் ஸ்டார் என சொல்லலாம். அந்த அளவு பல வித்யாசமான படங்களில் நடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த காலங்களில் மிக கடுமையான வேடங்களை ஏற்று மிக அனயாசமாக நடித்துள்ளார். இப்போது இருப்பது போல் எந்த டெக்னாலஜியும் இல்லாத காலக்கட்டத்திலேயே மிக கடுமையான மேக்கப் எல்லாம் போட்டு உடலை வருத்தி அவர் நடித்ததெல்லாம் நடிப்பின் மீது அவர் காட்டிய மிக உயர்ந்த அர்ப்பணிப்பு என்றுதான் சொல்ல வேண்டும்.

 

ஏபி நாகராஜன் அவர்கள் இயக்கிய திருவருட்செல்வர் படம் கடந்த 1967ல் வெளியானது இதில் இவர் பல்வேறு வேடங்களில் நடித்தாலும் க்ளைமாக்ஸில் வரும் அப்பர் வேடம் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மிக வயது முதிர்ந்த அந்த வேடத்தில் சிவாஜிகணேசன் வாழ்ந்திருந்தார் என்றுதான் சொல்ல வேண்டும்.

 

பெரியபுராணத்தை தழுவி எடுக்கப்பட்ட இந்த படத்தில் சிவாஜிகணேசன் சேக்கிழாராக, திருக்குறிப்பு தொண்ட நாயனார், சுந்தரமூர்த்தி நாயனார், அப்பர் என்ற திருநாவுக்கரசர் என இத்தனை வேடத்தில் நடித்திருந்தார்.

 

இந்த படம் 100 நாட்கள் வெற்றிகரமாக ஓடிய படம். சிவாஜியின் நடிப்புலக பயணத்தில் நவராத்திரி படம் போலவே இப்படமும் ஒரு முக்கிய மைல் கல். இரண்டு படத்திற்கும் ஏபி நாகராஜன் அவர்களே இயக்குனர்.