---Advertisement---

80களை கலக்கிய தென்றலே என்னை தொடு

Published on: September 17, 2025
---Advertisement---

60 மற்றும் 70களில் பிரபலமானவர் இயக்குனர் ஸ்ரீதர். இவர் 60 , 70களில் மட்டுமல்ல , தன்னுடைய இறுதிக்காலம் வரை பிரபலமாக இருந்தவர்.

ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பிரபலமாக இருந்த, இவர் ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் நன்றாக உச்சத்தில் இருந்த காலத்திலும் தொடர்ந்து தன்னுடைய பிரபலத்துவத்தை தக்க வைத்துக்கொண்டார்.

ரஜினி, கமல் மட்டுமின்றி, ரஜினி, கமல், கார்த்திக், மோகன், விக்ரம் என பலதரப்பட்ட நடிகர்களுடன் பணியாற்றினார். இதில் 80களில் மிக பிரபலமாக இருந்த மோகனுடன் இவர் இயக்கிய தென்றலே என்னை தொடு படம் மிக பிரபலமாக இருந்தது.

இளம் வாலிபராக மோகன், சின்ன சின்ன சேட்டைகள் மூலம் ஜெயஸ்ரீயை கவர்ந்து அவரை தனது காதல் வலைக்குள் வீழ்த்துகிறார் . ஜெயஸ்ரீயும் மோகனும் பல டூயட்டுகளை பாடி பரவசம் அடையும் நிலையில், ஆபிஸ் ஜொள்ளர்களான தேங்காய் சீனிவாசன் மற்றும் ஒய்ஜி மகேந்திரனுடன் ஒரு தவறான இடத்துக்கு சென்று மாட்டிகொள்வதை ஜெயஸ்ரீ பார்த்து விடுகிறார். சும்மா அவர்களுடன் கம்பெனிக்காக செல்லும் மோகன் ஒன்றும் செய்யாமலேயே ஜெயஸ்ரீயின் வெறுப்புக்குள்ளாகிறார்.

இதில் இருந்து அவர் எப்படி மீண்டு வருகிறார் என்பதை நல்ல நகைச்சுவையுடன் சொல்லி இருந்தார் ஸ்ரீதர். வெண்ணிற ஆடை மூர்த்தி, தேங்காய் சீனிவாசன், க்ளைமாக்ஸ் காமெடி காட்சிகள் என அனைத்தும் நன்றாக இருந்தன. இறுதியாக திருநீர்மலை கல்யாணம் என அனைத்தும் நன்றாக இருந்தன.

இளையராஜாவின் இசையில் தென்றல் வந்து என்னை தொடு, ஏம்மா அந்தி மயக்கமா,புதிய பூவிது, கண்மணி நீ வர காத்திருந்தேன், என்னாங்க மாப்புளை நலந்தானா என எல்லா பாடல்களும் நன்றாக இருந்தன.

 

ஸ்ரீதரின் நண்பரும் பல படங்களுக்கு நகைச்சுவை வசனம் எழுதிய சித்ராலயா கோபு இப்படத்தின் வசனங்களை எழுதி இருந்தார்.மிக சிறப்பான காமெடி படம் இது.