---Advertisement---

தாய் மூகாம்பிகை திரைப்படமும் இளையராஜா பாடலை உருவாக்கிய விதமும்

Published on: October 24, 2025
---Advertisement---

இறையருள் இயக்குனர் கே சங்கர் இயக்கிய தாய் மூகாம்பிகை திரைப்படம் கடந்த 1982 ஆம் ஆண்டு வெளிவந்தது. எண்பதுகளில் பக்தி படங்களை இயக்கியதில் முக்கியமானவராக திகழ்ந்தார் இயக்குனர் சங்கர். இவர் எம்ஜிஆர் திரைப்படங்களை அந்த காலங்களில் இயக்கியவர்.

 

கொல்லூரில் இருக்கும் மூகாம்பிகை அருளை விளக்கும் விதமாக வரலாற்று கதைகளை தொகுத்து  அவை தற்போதைய நவீன வாழ்வில் நடக்குமாறு ஒரு கதையை தயார் செய்திருந்தார் இயக்குனர் சங்கர்.

 

இப்படத்தில் சில காட்சிகள் மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் படமாக்கப்பட்டிருக்கும். கார்த்திக் அப்போது இப்படத்தில் நடித்திருந்தார் இருப்பினும் கார்த்திக் அப்போது முன்னணி நடிகர் இல்லை என்பதால் பெரிதாக தெரியவில்லை. சிவக்குமார் கார்த்திக்,சரிதா, தேங்காய் சீனிவாசன் சுஜாதா, மற்றும் பலர் படத்தில் நடித்திருந்தனர்.

 

இப்படத்தின் பூஜையை நாளை ஆரம்பிக்க வேண்டும் அதற்கேற்றவாறு ஒரு பாடலை முன்பே கம்போஸ் செய்து தரச் சொல்லி தயாரிப்பாளர் சொல்ல,இளையராஜாவுக்கு நெருக்கடி அதிகமானது. பஜகோவிந்தம் ஸ்டைலில் சில பாடல்களை உருவாக்க இளையராஜா நினைத்திருக்கிறார், அந்தப் பாடல் எதுவும் அவரையும் தயாரிப்பாளரையும் இப்படி யாரையும் திருப்தி படுத்தவில்லை. அப்போதுதான் திடீரென ஆதிசங்கரர் படத்தை நன்றாக உற்றுப் பார்த்ததும், அவருக்குள் இருந்த சிந்தனை ஊற்றை தட்டி விட்டது போல் இந்த ஜனனி ஜனனி பாடல் உருவாகி இருக்கிறது. சரி இந்த பாடலை ஜேசுதாசை வைத்து பாடலாக்கி விடலாம் என இந்த பாடலை இளையராஜா டிராக் பாடியிருக்கிறார் டிராக் என்றால், பயிற்சிக்காக பாடி காட்டுவது. ஆனால் ஜேசுதாஸ் இப்பாடலை பாட முடியாத சூழ்நிலையில் வேறு பாடல்களில் பிஸியாக இருந்ததால், அவசரம் கருதி இளையராஜா பாடிய ட்ராக் பாடலையே பயன்படுத்தினர்.

 

மிக நன்றாக அமைந்தது அந்தப் பாடலை இன்று வரை அனைவரும் கேட்டு மகிழ்ந்து வருகின்றனர் மிகப்பெரிய ஒரு பாடலாக அந்த பாடல் இன்றுவரை திகழ்ந்து வருகிறது.