---Advertisement---

மறைந்தார் மாயி பட இயக்குனர்…கண்ணீரை காணிக்கையாக்கும் கலையுலகம்…

Published on: May 27, 2024
surya prakash
---Advertisement---

சரத்குமார் எத்தனையோ வெற்றி படங்களை தனது திரை வாழ்வில் கொடுத்திருந்தாலும் “மாயி” அவரது அருமையான நடிப்பை நினைவில் வரவைக்கும் படமாகவே இருந்து வருகிறது.

படத்தில் சாந்த சொரூபனாகவே வந்திருப்பார் இவர். படத்தில் கோபம் உச்சம் தொட்ட நேரத்தில் அவர் பேசியிருந்த ‘மாயி யத்தான பாத்திருக்க?…மாயான்டிய பாத்ததில்லையே’ வசனம்  ரொம்ப ஃபேமஸ் அப்போது.

இப்படி ஒரு மிகப்பெரிய வெற்றியை சரத்குமார் பெற காரணமாக இருந்தவர் “மாயி” படத்தின் இயக்குனர் சூர்யபிரகாஷ். ராஜ்கிரண் நடித்த “மாணிக்கம்” தான் இவரது முதல் தமிழ் படம்  இயக்குனராக. குடும்பங்கள் பாராட்டும் படமாகவே அமைந்திருந்தது அது. தங்கைகள் மீது பாசம் கொண்ட அண்ணனாக நடித்திருந்தார் ராஜ்கிரண்.  ராஜ்கிரண் கதாநாயகனாக உச்சத்தில் இருந்த நேரம் அது.

maayi
maayi

அதன் பின்னர் சரத்குமாரை வைத்து “மாயி”. அதே போலவே மீண்டும் சரத்துடன் “திவான்” படத்தில் இணைந்தார். ஜீவன் கதாநாயகனாக நடித்த “அதிபர்”. அடுத்தது “வரசநாடு” என தனது கற்பனை சக்தியை கலை உலகத்திற்கு படங்களாக கொடுத்து வந்தார் சூர்யபிரகாஷ். இன்று காலை யாரும் எதிர்பாராத விதமாக அகால மரணமடைந்துவிட்டார். இவரது மறைவுச்ச்செய்தி கோலிவுட்டையே  பெரும்  அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இவர் இயற்கை எய்திய செய்திகேட்டு சரத்குமார் தனது இரங்கலை பதிவு செய்துள்ளார். வாழ்க்கை நிலையற்றது எனபதனை சூர்ய பிரகாஷின் மரணம் நிரூபித்துவிட்டதாகவும். நேற்று தான் அவரிடம் பேசினேன். ஆனால் இன்று இப்படி ஒரு அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது. அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிறார்த்திக்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க