---Advertisement---

ஒன்னாவது ஒப்பேருமா அனீ!…குழப்பத்தில் ஷங்கர்!…2கே கிட்ஸுக்கே பிடிக்கலையாமே?…

Published on: June 9, 2024
sankar anirudh
---Advertisement---

அனிரூத் தமிழ் சினமாவில் இசையை வேறு ஒரு விதாமாக பயணிக்க வைத்தவர்  என்றே சொல்லலாம். கிராமத்திய இசை, நாட்டுப்புற பாடல்கள், கானா பாடல்கள் என கொடுத்து  கேடப்பவர்களை துள்ளி குதித்து நடனமாட வைத்து வந்தார்கள் இதற்கு முன் இசையமைத்துவந்தவர்கள்.

ஆனால் அனிரூத்தோ இவற்றின் கலவையாக ஒரு பாதையை தேர்வு செய்து இன்றைய 2கே கிட்ஸை தன் வழிக்கு  வரவைத்தவர் எனறே சொல்லலாம். குறிப்பாக அஜீத்திற்கு இவர் போட்டுக்கொருத்த மெட்டான ‘ஆலுமா, டோலுமா’வாக இருகட்டும், சமீபத்திய ரஜினியின் “ஜெயிலர்” படத்தின் டைகர் குக்கும் பாடலாகட்டும் அதிலிருக்கும் வைப் தமிழ் நாட்டையே குலுங்க வைத்தது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள “இந்தியன்-2” படம் அடுத்த மாதம் வெளியாக இருக்கிறது. படத்தின் ஆடியோ லாஞ்ச் சமீபத்தில் மிகபிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.

 

indian 2
indian 2

அதிலிருந்து ‘தாத்தாவராரு’ பாடல் இப்போது எல்லா இடங்களிலும் ஒலிக்க துவங்கியுள்ளது. அதே நேரத்தில்  அனிரூத் இசையமைத்துள்ள விதம் விமர்சனத்துக்குள்ளாகி விட்டது.

படக்கதை நிச்சயமாக “இந்தியன்” முதல் பாகத்தை போல அழுத்தம் அதிகம் கொண்டதாகத்தான் இருக்கும். முதல் பாகத்தில் இந்தியன் தாத்தா சேனாபதியை பார்த்து மிரண்டு போனார்கள் அப்போதைய ரசிகர்கள்.

அப்படி ஒரு கம்பீரமான கதாப்பாத்திரம் அது. “இந்தியன் – 2” கதையும் தாத்தாவை சுற்றியே தான் இருக்கும் என்பதால் கம்பீரம் மிக்க தாத்தா கமலுக்காக இவர் இசையமைத்துள்ள இந்த பாடல் எடுபடுமா? என்ற பேச்சு எழத்துவங்கியுள்ளது.

அதேபோல படத்தின் முழு பாடல்களும் வெளியிடப்பட்ட நிலையில் படத்தின் ஆடியோ இதுவரை எதிர்பார்த்த ஹிட் ஆக வில்லையாம். இதானால் இயக்குனர் ஷங்கர் குழப்பத்தில் இருப்பது தெரிவதாக பிரபல திரை விமர்சகர் பிஸ்மி சொல்லியிருக்கிறார்.

2கே கிட்ஸை குறிவைத்து தான் தாத்தா வராரு பாடல் இசையமைக்கப்பட்டது. ஆனால் அவர்கள் கூட இந்த பாடலை பெரிதாக கண்டுகொள்ளவில்லை என தெரிவதாக பிஸ்மி கவலை தெரிவித்திருக்கிறார்.

Krish

கிரிஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, விளையாட்டு சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர்.

இதையும் படிங்க

'ஓம்' திரைப்படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு குறித்து நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கை வடிவம்.

ரஜினி மற்றும் சூர்யா படங்களுக்காக ‘ஓம்’ ரிலீஸை ஒத்திவைத்தார் தனுஷ்: அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியீடு!

Official theatrical release poster for Vishnu Vishal and Mamitha Baiju's movie Irandu Vaanam.

விஷ்ணு விஷால் – மமிதா பைஜு ஜோடியின் ‘இரண்டு வானம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு! அக்டோபர் 23-ல் உலகமெங்கும் வெளியீடு!

News visual highlighting the casting fraud complaint and police investigation regarding the movie Dharman.

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் நடிக்க வாய்ப்பு என்ற பெயரில் மோசடி: கமல் தரப்பு காவல் ஆணையரகத்தில் புகார்!

Visual representation of David Warner's viral AI dance video for the Jailer 2 song 'Ala Polelo'.

ஜெயிலர் 2 ‘அலா பொலேலோ’ பாடலுக்கு நடனமாடும் டேவிட் வார்னர்: ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட வைரல் வீடியோ!

Visual representation of director Ashwath Marimuthu revealing casting trivia for the movie Dragon.

‘டிராகன்’ பட வாய்ப்பை நழுவவிட்ட பிரீத்தி முகுந்தன்: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து வெளியிட்ட சுவாரஸ்யத் தகவல்!

Behind-the-scenes set photo from director Anand Shankar's upcoming film.

இயக்குநர் ஆனந்த் சங்கரின் புதிய படப்பிடிப்புத் தளம்: உற்சாகக் கிளிம்ப்ஸ் வெளியீடு!